Blue Sattai Maran On Kanguva: கங்குவா படத்தின் இசைக் கருவிகள் இதுதான்.. பங்கம் பண்ணும் ப்ளூ சட்டை!
சென்னை: நேற்றில் இருந்து அதாவது கங்குவா படம் ரிலீஸ் ஆனதில் இருந்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார். வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வந்தால்தான் படத்தினையும், தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் என அனைவரையும் சகுட்டுமேனிக்கு தாக்கிக் கொண்டு இருப்பார். ஆனால் சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆனதால், அதிகாலையில் இருந்தே படம் குறித்தும் படம் பார்த்தவர்கள் படம் குறித்து என்ன கூறுகின்றார்கள் எனவும், எக்ஸ் பக்கத்தில் தேடித் தேடி பகிர்ந்து வருகின்றார். குறிப்பாக படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் குறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் சூர்யா - தீஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. இந்தப் படத்தினை சுமார் இரண்டரை ஆண்டுகளாக எடுத்து நேற்று திரைக்கு கொண்டு வந்துள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களை அளிக்க, படக்குழுவினருக்கு கொஞ்சம் அப்செட் ஏற்பட்டது எனலாம். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், கங்குவா காட்டு மொக்கை படம் இல்லை, காடு காடா போய் மொக்கைப் படத்தை எடுத்து வைத்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்றுக் காலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முழுவதும் கத்திக் கொண்டே உள்ளார்கள் என்றும், படத்தின் பின்னணி இசை தெளிவாகவே இல்லை என்றும், முழுக்க முழுக்க இரைச்சலாக இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். சூர்யாவில் இருந்து படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் எதற்கு எடுத்தாலும் கத்திக்கொண்டுதான் இருந்தார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
கத்துவா: இப்படியான நிலையில் படத்தின் இசை மற்றும் பின்னணி இசை குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார். நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், " படத்தில் கருணாஸ் முதல் கலைராணி வரை ஏன் கத்துகின்றார்கள் எனத் தெரியவில்லை. அதுவும் ஸ்லோமோஷனில் கத்துகின்றார்கள். சேதமடைந்த செவிப்பறைகளுடன் படம் பார்க்கச் சென்றதற்காக வருந்துகின்றேன். நிச்சயம் லோடு லோடாக பஞ்சு வேண்டும். படத்திற்கு கங்குவா என்பதற்கு பதிலாக கத்துவா என வைத்திருக்கலாம். கத்தாம படம் பாருங்கப்பா.. கத்தறதேபடத்துல இருக்கறவங்கதாப்பா" என பதிவிட்டிருந்தார்.

மியூசிக்: தேவி ஸ்ரீ பிரசாத் இசை குறித்து பதிவிடும்போது, "எல்லா விமர்சனமும் கழுவிஊத்துறது இவரைத்தான். இருக்கற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு.. அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்காராம்ல" எனப் பதிவிட்டார். இவரது இந்தப் பதிவிற்கு இணையவாசி ஒருவர், என்ன தலைவரே இந்தமுறை மியூசிக் டைரக்ட்டர் பக்கம் வந்து இருக்கீங்க? எனக் கேள்வி எழுப்ப, அதற்கு ப்ளூ சட்டை மாறனோ, ' நம்ம காதாச்சே' எனப் பதிவிட்டார். இவரது இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவியது.
புது போஸ்ட்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், கங்குவா படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் பயன்படுத்திய இசைக்கருவிகள் இதுதான் என ஒரு படத்தினைப் பகிர்ந்துள்ளார். அது பாத்திரங்கள் விற்கும் கடையின் புகைப்படம். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கங்குவா படத்தின் பின்னணி இசையையும் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











