Kanguva: அட்லீஸ்ட்.. அந்த வாயை வச்சிட்டாவது சும்மா இருங்க.. கங்குவா டீமிற்கு ப்ளூ சட்டை வார்னிங்!
சென்னை: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கங்குவா குறித்த செய்திகள்தான் குவிகின்றது. சூர்யா - திஷா பதானி நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் இந்தியா முழுவதும் சுமார் 11 ஆயிரம் ஸ்க்ரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகளில் இருந்து படம் பார்த்து வரும் ரசிகர்கள் படம் குறித்து, தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

படம் இன்று ரிலீஸ் ஆகி இருந்தாலும், படத்தின் புரோமோசனை ஒருமாதத்திற்கு முன்னர் இருந்து படக்குழு தொடங்கியது. அதேநேரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து தான் எங்கு பேசினாலும் பெரும் நம்பிக்கையோடே பேசி வந்தார். இதனை பலரும் ஓவர் பில்டப்பாகவே பார்த்தனர். குறிப்பாக படம் ரூபாய் 2000 கோடிகளை அசால்ட்டாக வசூல் செய்யும் எனவும், படம் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது எனவும் கூறினார்.
ஓவர் பில்டப்: மேலும் கங்குவா படத்தின் முதல் பாகத்தோடு வேண்டுமானால் மற்ற படங்கள் போட்டிக்கு வரலாம். ஆனால் இரண்டாம் பாகத்துடன் எந்த படமும் போட்டிக்கு வராது. பாலிவுட்டில் இந்தப் படத்தினை மிகவும் கவனமாக கண்காணித்து வருகின்றார்கள். சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் புரோமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து படத்திற்கு பில்டப் கொடுத்து வந்தார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தின் வெற்றி விழா சென்னையில், மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் எனவும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களையும் சென்னை அழைத்து வந்து வெற்றி விழா நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

படுதோல்வி: இப்படியான நிலையில் படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அவர் அந்தப் பதிவில், "தேவையான அளவுக்கு மட்டும் ப்ரமோசன்பண்ணிட்டு அமைதியா இருந்தா சுமார் படம் நல்ல வசூலாகும். நல்ல படம் பெரிய ஹிட்டாகும். உதாரணம்: லப்பர் பந்து, அமரன். ஓவர் பில்டப் தந்த பல தமிழ்ப்படங்கள் படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு. உதாரணம்: இந்தியன் 2. கங்குவா நிலை என்னவாகும் என்பது இனிதான் தெரியும்.

வடை: இனியாவது ஹாலிவுட் ரேஞ்ச் என்று சொல்வதை நிறுத்துங்கள். ஜூராசிக் பார்க், அவதார், டைட்டானிக், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களின் பொருட்செலவு, தொழில்நுட்ப நேர்த்தியை தொடுவது மிகக்கடினம். அதை நாம் தொடும்போது.. அவர்கள் மேலும் பலமடங்கு முன்னேறி இருப்பார்கள். அட்லீஸ்ட்.. அந்த வாயை வச்சிட்டாவது சும்மா இருங்க. Waiting for .. 200, 500,1000,2000 கோடிகள் வடை" எனப் பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











