சிவகார்த்திகேயன் வளர்ச்சியைப் பார்த்து கடுப்பாகும் தனுஷ்? ப்ளூ சட்டை மாறன் என்னங்க இப்படி சொல்றாரு!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையிலான மோதல் பல நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் மறைமுகமாக பனிப்போர் என்பது நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. இப்படி இரண்டு நடிகர்களுக்கு இடையிலான மோதல் என்றால் அது, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை சொல்லலாம். சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் வந்த போது, அவருக்கு பலவகையில் உறுதுணையாக இருந்தவர் தனுஷ். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே மோதல் ஏற்பட இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் இவர்கள் இருவர் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன், தனுஷின் 3 படத்தில் காமெடியனாக நடித்தார். அதேபோல், தனுஷ் தயாரிப்பில் எதிர் நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இருவருக்கும் இடையிலான உறவு சில ஆண்டுகள் வரை சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் இருவருக்கும் இடையில் சில பிரச்னைகள் ஏற்பட இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வது, வணக்கம் சொல்லிக் கொள்வது என இருக்கிறார்கள்.

Blue Sattai Maran Sivakarthikeyan Dhanush Vijay

ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டது தனுஷ் தான் என கூறுவார்கள். சிவகார்த்திகேயன் தான் தயாரித்த படமான, கொட்டுக்காளி படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட, " என்னை யாரோ வளர்த்து விட்டார்கள் என கூறுகிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் யாரும் இல்லை" என தனுஷை மறைமுகமாக சாடினார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு கூட, சிவகார்த்திகேயனின் அயலான் படமும், தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ரிலீஸ் ஆகி மோதிக்கொண்டது.

Blue Sattai Maran Sivakarthikeyan Dhanush Vijay

சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் என இருவரும் கிட்டத்தட்ட ஒரே அளவு சம்பளம் வாங்கும் நடிகர்கள் என கூறப்படுகிறது. ஆனால் அமரன் படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூபாய் 70 கோடிகள் வரை அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் ரிலீஸுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளம் அசால்ட்டாக ரூபாய் 100 கோடிகளை தாண்டும் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சியை பார்த்து, தனுஷ் கடுப்பாவதாக, ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Blue Sattai Maran Sivakarthikeyan Dhanush Vijay

தனுஷ்: அதாவது, இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், " நான் உனக்கு த்ரீ படத்துல காமடியன் கேரக்டர் தந்து, எதிர்நீச்சல்ல ஹீரோவாக்கி விடனும். அமரன்ல தேசபக்தியையும், பராசக்தில திராவிட பக்தியையும் காட்டி.. டப்புனு மேல வந்து 100 கோடி சம்பளம் வாங்குவ. ஆனா நான் அசுரன், கர்ணன், கேப்டன் மில்லர்னு தலித் முன்னேற்ற படத்துல நடிச்சி... இன்னொரு பக்கம் ஓம் நமச்சிவாயன்னு மந்திரம் ஓதி,தேசிய விருது வாங்க லாபி செஞ்சி, அரசியல்வாதி மாதிரி வெள்ளை வேட்டி, சட்டை கெட்டப் போடுறதுன்னு.. பல வித்தை காட்டியும்..‌‌ 50 கோடிதான் சம்பளம் வாங்கனும்?

Blue Sattai Maran Sivakarthikeyan Dhanush Vijay

கமெண்ட்: நாளைக்கி நீ கட்சி ஆரம்பிச்சி.‌. தவெக கூட கூட்டணி வச்சி.. பவன் கல்யாண் மாதிரி துணை முதல்வராகி..கடைசில அந்த கட்சியை கவுத்து.. சி.எம்.ஆகிடுவ. அப்பறம் என் படத்துக்கு எதுனா பஞ்சாயத்து வந்தா.. உன் கட்சி ஆபீஸ்ல வந்து கை கட்டி நிக்கனுமா?" என பதிவிட்டுள்ளார். இத்துடன், மீம் டெம்ப்ளேட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Blue Sattai Maran Sivakarthikeyan Dhanush Vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X