Vijay: தளபதி 69 கடைசி படம் இல்லையா? மீண்டும் நடிக்க வராறா? ப்ளூ சட்டை மாறன் போடும் புது கணக்கு!

சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான வேலைகளிலும் தனது கடைசி படமான தளபதி 69க்கான வேலைகளிலும் செம பிசியாக உள்ளார். மாநாடு முடிந்த சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிக் கொள்ளலாம் என விஜய் தரப்பில் கூறப்பட்டதாக ஒரு பேச்சும், நாளை முதல் அதாவது அக்டோபர் 5ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக ஒரு பேச்சும் ஓடிக்கொண்டு உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என பலர் தெரிவிப்பதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். கிராண்ட் ஓப்பனிங் உள்ள மாஸ் ஹீரோ, அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்தில் இவரது சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடிகள் என தயாரிப்பாளரே கூறினார். அதேபோல் கடைசி படமான தளபதி 69இல் இவரது சம்பளம் ரூபாய் 275 கோடிகள் என கூறப்பட்டது. இந்தச் சம்பளம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் சம்பளத்தை விடவும் அதிகம் எனவும் கூறப்பட்டது.

vijay blue sattai maran thalapathy 69

இப்படியான நிலையில், தளபதி 69 படம் அறிவிக்கும்போதே படம் அடுத்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவலைப் பார்த்த ரசிகர்கள் அக்டோபரில் தீபாவளி உட்பட மொத்தம் மூன்று விழாக்கள் வருகின்றது. இந்த மூன்று விழாக்களில் எதாவது ஒன்றில் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் வலைபேச்சு பிஸ்மி விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும், அவர் மீண்டும் சினிமாவுக்கு வருவாரா என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஒரே நாளில்: இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 4ஆம் தேதி அவருடைய கடைப்படமான தளபதி 69 படத்தின் பூஜையும், அவரது கட்சியின் முதல் மாநாடுக்கான பந்தகால் நடும் பூஜையும் நடைபெற்றது. இதில் விஜய் தனது கடைசிப் படத்தின் பூஜையில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

vijay blue sattai maran thalapathy 69

கருத்து: இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் அவரது அரசியல் கட்சி குறித்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக தெலங்கானாவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், விஜய் தனது முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிடுவார். சினிமாக்காரரைப் பார்க்க மக்கள் திரைப்படம் பார்க்க கூடுவதைப்போல் கூடுவார்கள். ஆனால் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதை தண்ணீரில்தான் எழுதவேண்டும் என கூறினார்.

ப்ளூ சட்டை மாறன்: இதுமட்டும் இல்லாமல் பிரபல யூடியூபர் பிஸ்மி இது தொடர்பாக பேசுகையில், 2026ஆம் ஆண்டில் விஜய் அரசியலில் தான் நினைத்த இடத்தை எட்ட முடியாது. எனவே அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் எனக் கூறினார். அதேபோல் இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில், அரசியலில் அதிக பணம் செலவாகும். ஒரு கட்டத்துக்கு மேல் விஜய் பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வருவார் எனத் தெரிவித்தார். இப்படி பலரும் விஜய் மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வருவார் எனத் தெரிவித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், “ 2026 தேர்தல் முடிந்ததும் விஜய் மீண்டும் நடிக்க வருவார் என அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக நிபுணர்கள் கருத்து” என பதிவிட்டுள்ளார்.

vijay blue sattai maran thalapathy 69

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X