Vijay: கழட்டிவிடப்பட்ட திமுக.. நட்புனா என்னனு தெரியுமா? விஜய்க்கு உறுதுணையாக தவெகவில் சேர்ந்த நடிகர்
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான வேலைகளிலும் தனது கடைசி படமான தளபதி 69க்கான வேலைகளிலும் செம பிசியாக உள்ளார். தனது கட்சியின் முதல் மாநாடு என்பதால் அதனை மிகவும் பிரமாண்டமாக நடத்திட முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது எனக் கூறியது விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பலரது மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது கட்சியில் நடிகர் தாடி பாலாஜி இணைந்துள்ளளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். கிராண்ட் ஓபனிங் உள்ள மாஸ் ஹீரோ, அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கோட் படத்தில் இவரது சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடிகள் என தயாரிப்பாளரே கூறினார். அதேபோல் கடைசி படமான தளபதி 69இல் இவரது சம்பளம் ரூபாய் 275 கோடிகள் என கூறப்பட்டது. இந்தச் சம்பளம் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் சம்பளத்தை விடவும் அதிகம் எனவும் கூறப்பட்டது.

இப்படியான நிலையில், தளபதி 69 படம் அறிவிக்கும்போதே படம் அடுத்த ஆண்டு அதாவது 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவலைப் பார்த்த ரசிகர்கள் அக்டோபரில் தீபாவளி உட்பட மொத்தம் மூன்று விழாக்கள் வருகின்றது. இந்த மூன்று விழாக்களில் எதாவது ஒன்றில் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசி வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிகையாளர் வலைபேச்சு பிஸ்மி விஜய்யின் அரசியல் பயணம் எப்படி இருக்கும், அவர் மீண்டும் சினிமாவுக்கு வருவாரா என்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஒரே நாளில்: இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி அவருடைய கடைசிப் படமான தளபதி 69 படத்தின் பூஜையும், அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுக்கான பந்தல் கால் நடும் பூஜையும் நடைபெற்றது. இதில் விஜய் தனது கடைசிப் படத்தின் பூஜையில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.
கருத்து: இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலரும் அவரது அரசியல் கட்சி குறித்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக தெலங்கானாவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், விஜய் தனது முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிடுவார். சினிமாக்காரைப் பார்க்க மக்கள் திரைப்படம் பார்க்க கூடுவதைப்போல் கூடுவார்கள். ஆனால் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதை தண்ணீரில்தான் எழுதவேண்டும் என கூறினார். அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், உலகத்திலேயே கொள்கை இல்லாமல் தொடங்கப்பட்ட கட்சி என்றால் அது நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சிதான் எனவும் இதுதான் மிகப்பெரிய காமெடி எனவும் விமர்சித்தார்.

தாடி பாலாஜி: இந்நிலையில் காமெடி நடிகர் தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தாடி பாலாஜி, " தலைவர் விஜய் தன்னை மாநாட்டுப் பணிகள் செய்யச் சொன்னதாகவும் அந்தப் பணிகளை சிறப்பாக செய்வேன். புதிதாக ஒருவர் அரசியலுக்கு வரும்போது ஊக்குவிக்க யாரும் இல்லை. தமிழிசை இதற்கு முன்னர் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரகாக பணியாற்றியதால் விஜய்யின் கடைசி சினிமா குறித்து தண்ணீரில் எழுதி வைக்கச் சொல்லியிருப்பார்" என பேசினார். தாடி பாலாஜி திமுகவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் பல்வேறு நடிகர்கள் நடிகைகள் தொடங்கி திரையுலகைச் சார்ந்தவர்களும் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











