Rajinikanth: ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சூப்பர் ஸ்டார்.. அட்டாக் பண்ண ஆரம்பிச்ச ப்ளூ சட்டை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் மட்டும் இல்லை மூத்த நடிகர்களில் ஒருவர். அடுத்த ஆண்டு வந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தமிழ் சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகின்றது. இவருக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலோச்சிய நடிகர்கள் இப்போது வரை தாக்குப்பிடித்துள்ளார்களா என்றால் இல்லை. ஆனால் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் மன்னனாகவும் திகழ்ந்து வருகின்றார். இவரது படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே ரசிகர்களுக்கு திருவிழாதான். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன்.
இந்தப் படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் சூப்பர் ஸ்டாரின் 170வது படம் ஆகும். இந்தப் படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு தனது சினிமா வாழ்க்கையில் 50வது ஆண்டு என்பதால் அந்த ஆண்டில் இரண்டு படங்களை வெளியிட முடிவு செய்து அதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக அவர் தற்போது நடித்து வரும் கூலி படமும், இதற்கு முன்னர் இவரது நடிப்பில் வெளியாகி மாஸ் வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொன் விழா: அதனால்தான் கூலி படத்தின் படப்பிடிப்புகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதி ஆனார். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சிகிச்சை என்பதால் கூலி படக்குழுவினரிடம் ஏற்கனவே தெரிவித்ததாக கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

நன்றி: மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 3ஆம் தேதி இரவு டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில் நேற்று, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார். இன்னும் சில வாரங்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் ரஜினியை காட்டமாகத் தாக்கி பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்: அதில், "ஆயத பூஜைக்கு வர வேண்டிய கங்குவாவை விரட்டி விட்டு.. என் படத்தை ரிலீஸ் செய்றேன். கைதி 2 பண்ண வேண்டிய லோகேஷை கைது பண்ணி கூலி படம் எடுக்க வக்கிறேன். விஜய் பட டைரக்டர்கள் ARM, நெல்சன், லோகேஷை என் ப்ராஜக்ட்ல கொண்டு வந்தேன். என் அடுத்த டார்கெட் H.வினோத். எப்படி என் சாணக்ய தந்திரம்?" என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் காட்டமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்ந்து காட்டமாக விமர்சிப்பதிலும் கலாய்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டும் நபராக ப்ளூ சட்டை மாறன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











