Kanguva: கங்குவா படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் இப்படிதான் நடந்துச்சு.. ஃபன் செய்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் இன்றைக்கு கங்குவா படத்தின் ரிலீஸ் நாள் என்பதை விடவும், விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஃபுல் ஃபார்மில் இருந்த நாள் எனக் கூறினால் சரியாக இருக்கும். கங்குவா படம் ரிலீஸ் ஆனதுதான் ஆனது, காலையில் இருந்தே கங்குவா படம் மற்றும் படக்குழுவினரை கலாய்த்தும் விமர்சித்தும் வருகின்றார். இந்நிலையில் படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் எப்படி இருந்திருக்கும் என தனது கற்பனையில் செம கலாயாக பதிவிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

blue sattai maran kanguva suriya siva

படத்தினை காலையில் இருந்தே கடுமையாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்காக பலரும் காத்துக் கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில், படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் எப்படி நடந்திருக்கும், ஸ்டோரி டிஸ்கஷனின்போது சூர்யா என்னவெல்லாம் பேசியிருப்பார், அதற்கு சிறுத்தை சிவா என்னவெல்லாம் பதில் அளித்திருப்பார் என கற்பனையாக பதிவிட்டுள்ளார். இது நகைச்சுவையாக சூர்யா மற்றும் சிறுத்தை சிவாவை கலாய்க்கும் விதமாக இருப்பதால் பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

சிங்கம் - சிறுத்தை: அதாவது ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " Story discussion நடந்தபோது..‌

சிங்கம்: நான் உடனே பான் இட்டியா ஸ்டார் ஆகனும். அந்த மாதிரி கதை இருக்கா?

blue sattai maran kanguva suriya siva

சிறுத்தை: அதுக்கு ரெண்டே வகையான மாவுதான் நம்ம நாட்ல இருக்கு. ஒண்ணு பாகுபலி, RRR மாதிரி கற்பனை வரலாறு. இல்லன்னா‌‌.‌ புஷ்பா, KGF மாதிரி தாடி, துப்பாக்கி.. எது வேணும்?

சிங்கம்: நான் ஒரே படத்துல பிரபாஸ், யஷ் ரேஞ்சை தொடனும்.

சிறுத்தை: நோ ப்ராப்ளம் சார்.ஜடாமுடி கங்குவா. கோன் ஐஸ் தாடி ஃப்ரான்சிஸ். டபுள் ரோல்‌.

blue sattai maran kanguva suriya siva
.
சிங்கம்: சிறப்பு. - சோலிமுடிஞ்சது.ஃபிரான்சிஸ் - லோ பட்ஜெட் யாஷ்" என பதிவிட்டுள்ளார். இதில் இவர் சிங்கம் என சூர்யாவையும், சிறுத்தை என இயக்குநர் சிவாவையும் குறிப்பிடுகின்றார்.

சக்சஸ் மீட்: மேலும் மற்றொரு பதிவில், கோன் ஐஸ் தாடி.. எங்க ராக்கி பாய்க்கு மட்டும்தான் மாஸா இருக்கும். நீங்க இதே மாதிரி தாடி வச்சிட்டு குறுக்க போயிடாதீங்க ஃப்ரான்சிஸ் சார்ர்ர் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், இப்படியே ஆளாளுக்கு மசமசன்னு நின்னுட்டு இருந்தா எப்படி? உங்களுக்கு நீங்களே மாலை மாத்தி, கேக் வெட்டி சக்ஸஸ் மீட் வக்கிறதுதான சரி எனவும் பதிவிட்டு படக்குழுவினரைப் கலாய்த்துள்ளார்.

blue sattai maran kanguva suriya siva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X