ஏ சர்டிஃபிகேட் ராயன்! சிறுவர்களை அழைத்து சென்ற ரசிகர்கள்! நடவடிக்கை எடுக்க ப்ளூ சட்டை மாறன் கோரிக்கை!

சென்னை: நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை இயக்கும் பொறுப்பை மற்ற இயக்குநர்களுக்கு வழங்கி, கட்டயாம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தாமல், தானே இயக்கியுள்ளார். தனது 50வது படத்திற்கு ராயன் என பெயர் வைத்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஏ சர்டிஃபிகேட் படத்திற்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை மட்டுமே பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது அரசு விதி. இப்படியான நிலையில் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை ராயன் படம் பார்க்க தனுஷ் ரசிகர்கள் அழைத்துச் சென்றதாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Raayan Dhanush Blue Sattai Maran

ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது.

இயக்குநராக மாபெரும் வெற்றி: நடிகர் தனுஷ் இயக்குநராக மாபெரும் வெற்றியைப் பெறப்போகின்றார் என்பதற்கு இந்த படம் காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் படம் ரூபாய் 100 கோடிகள் வசூலைப் படைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ரூபாய் 100 கோடிகளை ராயன் படம் வசூல் செய்தால், தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொள்வார் தனுஷ்.

விஷுவல் ட்ரீட்: படத்தின் முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. அதேபோல், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து மிரளவைத்துள்ளார் தனுஷ். இதுமட்டும் இல்லாமல், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயும் இரவிலேயுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படம் பார்த்த எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

ப்ளூ சட்டை மாறன்: படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியுள்ளது. ஏ சர்டிஃபிகேட் படத்திற்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை மட்டுமே பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது அரசு விதி. இப்படியான நிலையில் 18 வயதுக்கு குறைவான மனவளர்ச்சி மாற்றுத்திறனாளி குழந்தைகளை ராயன் படம் பார்க்க, சிதம்பரத்தில் உள்ள தனுஷ் ரசிகர்கள் அழைத்துச் சென்றதாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Raayan Dhanush Blue Sattai Maran

நடவடிக்கை: மேலும் தனது பதிவில், “ ராயன் படத்திற்கு A சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்ட். அப்படி இருந்தும் பள்ளி சிறுவர்களை தியேட்டருக்கு அழைத்து சென்ற தனுஷ் ரசிகர்கள், அதற்கு அனுமதியளித்த பள்ளி நிர்வாகம் மற்றும் திரையரங்கம் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?” என குறிப்பிட்டுள்ளார். சினிமா உலகில் மிகவும் கவனம் பெறும் இடத்தில் இருக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளதால் இதன் உண்மைத் தன்மையை தமிழ்நாடு அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X