நோகாம நோம்பி கும்புடற நீங்கதான் டூப்.. உயிரை பணயம் வைக்கும் டூப்தான் ஒரிஜினில்.. பிரபலம் அட்டாக்!

சென்னை: சினிமா உலகில் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் என அனைவரும் சில காட்சிகளை படமாக்கும்போது, அவர்களுக்கு பதிலாக டூப் போட்டுக்கச் சொல்லுவார்கள். இது சினிமா உலகில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தாங்களே நடிக்கின்றோம் என முன் வருவார்கள். அப்படியான நடிகர்களில் தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நாளில் இருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக டூப் போடாமல் தானே நடித்த நடிகர் என்றால் அது நடிகர் டாம் குரூஸ்தான். ஆனால் தற்போது மிஷன் இம்பாசிபல் படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு டாம் குரூஸ்க்கு பதிலாக டூப் போட்டு படமாக்கப்பட்டுள்ளதை டாம் குரூஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் வெளியானதும் ரசிகர்கள் மனதில் பெரும் ஆச்சரியம்தான் குடிபுகுந்துள்ளது எனலாம். ஹாலிவுட் சினிமாக்களில் டூப் போடாமல் எப்பேர்பட்ட சண்டைக் காட்சிகளாக இருந்தாலும் சரி டூப் போடாமல் நடிக்கும் நடிகர் டாம் குரூஸ். இன்னும் சொல்லப்போனார் ஹாலிவுட் சினிமாக்கள் தொடங்கி நமது கோலிவுட் சினிமா வரை நடிகர்கள் டூப் போடாமல் சில காட்சிகளில் அதுவும் ரிஸ்கான காட்சிகளில் தாங்களாவே நடிக்க முன்வருகின்றார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் டாம் குரூஸ் தான்.

blue sattai maran tom cruise mission impossible

டாம் குரூஸ்: இப்படியான நிலையில் அவரே தற்போது மிஷன் இம்பாசிபல் படத்தில் தனக்கு பதிலாக வேறு ஒருவரை டூப் போட்டு நடிக்கச் சொல்லியுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த சினிமா உலகமுமே ஆச்சரியத்துடன் பார்க்கின்றது. மேலும் தமிழ் சினிமா உள்ளிட்ட இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகளில், அதுவும் மிகவும் ரிஸ்கான சண்டைக் காட்சிகளில் கதாநாயகர்கள் அவர்கள் நடிக்காமல் மற்றவர்களை டூப் போட்டு நடிக்கச் சொல்லி விடுகின்றனர். ஆனால் தனது உயிரினை பணயம் வைத்து டூப் போட்டு நடிக்கும் நடிகர்களுக்கு, சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.

சிவகார்த்திகேயன்: அண்மையில் சிவகார்த்திகேயன் மேம்பாலத்தில் இருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால், இது போன்ற காட்சிகள் தொடங்கி ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு உபரணங்களும் தாவும் காட்சிகள், ஓடுகின்ற வாகனத்தில் தாவும் காட்சிகள் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

blue sattai maran tom cruise mission impossible

ப்ளூ சட்டை மாறன்: இதுபோன்ற காட்சிகளில் நடிக்க தமிழ் சினிமா மட்டும் இல்லை இந்திய சினிமாவில் இருக்ககூடிய பெரும்பாலான நடிகர்கள் இப்போதுவரை தயாராகவே இல்லை. இந்நிலையில் டாம் குரூஸ் குறித்த செய்தியைப் பகிர்ந்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நடிகர்களை நோக்கி காட்டமான வார்த்தைகளை வீசியுள்ளார். அதில், " உலகின் டாப் ஹீரோ. உண்மையை சொல்றாரு. இங்க இவனுங்க.. ஹெலிகாப்டர்ல தொங்குனேன், ரெண்டு வருசம் மாடா உழைச்சேன், சிக்ஸ் பேக் வச்சதால சிக்ஸ் மந்த்ஸ் சாப்புடலன்னு உருட்டிட்டு திரிய வேண்டியது. உயிரை பணயம் வச்சி வேலை செய்யற டூப்தான் ஒரிஜினில். க்ரீன்மேட்ல நோகாம நோம்பி கும்புடற நீங்கதான் டூப். இனியாவது டூப் போட்டு நடிக்கறவங்களுக்கு சம்பளத்தை நல்லா ஏத்தி குடுங்க" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவினைப் பார்த்த பலரும் டூப் நடிகர்களுக்கான சம்பளத்தை அதிகமாகத் தரவேண்டும் என பேசி வருகின்றனர்.

blue sattai maran tom cruise mission impossible

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X