கோலிவுட்டிலும் அட்ஜெஸ்மெண்ட்.. விரைவில் வெடிக்கும் பிரச்னை.. ப்ளூ சட்டை பதிவால் நடுங்கும் கோலிவுட்!
சென்னை: தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது மிகவும் பரபரப்பாகவும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள பிரச்னை என்றால் அது மலையாள சினிமா உலகில் நடைபெற்ற நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்னைதான். முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த விரிவான விசாரணை அறிக்கையின் காரணமாக இந்தப் பிரச்னை பூதாகரமாக மாறியுள்ளது. மேலும் ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன் லால் அவராகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால், மோகன் லால் தனது பதவியை ராஜினாமா செய்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன் லால் ராஜினாமா செய்ததால், மோகன் லாலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் எனவும், அதனால்தான் அவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.

இதுமட்டும் இல்லாமல், ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கைக்குப் பின்னர், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல், பல நடிகர்கள் மீது பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளித்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகமே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளது. இதுமட்டும் இல்லாமல், கேரளாவில் இருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் பலமொழி திரைப்படங்களில் நடித்த நடிகைகளும் உள்ளனர்.
தமிழ் சினிமா: இந்த நடிகைகள் ஹேமா கமிட்டியிடம் மற்ற மொழி நடிகர்கள், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் என பலரும் நடுங்கிக் கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் பக்கத்தில், விரைவில் தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரச்னை பூதாகரமாக மாறும் என பொருள் படும்படி பதிவிட்டுள்ளார். அதாவது, ” கேரள திரையுலகை தொடர்ந்து கோலிவுட்டிலும் சர்ச்சை கிளம்ப வாய்ப்பு எனவும், மோகன்லால் உள்ளிட்டோர் ராஜினாமா. நடிகர் சங்கம் கலைப்பு. சித்திக் மீது வழக்கு பதிவு. கேரள திரையுலகை உலுக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் எனவும் இரு வேறு பதிவுகளாக பதிவிட்டுள்ளார்.
பாலியல் இச்சை: ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவிலும் இது போன்ற பாலியல் பிரச்னைகள் விரைவில் வெளி வரவேண்டும் எனவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இளம் நடிகைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை, தங்களது பாலியல் இச்சைக்கு இணங்க கட்டாயப்படுத்துவது என்பது, முற்றிலுமே தவறானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.


Click it and Unblock the Notifications











