Simbu: மேட்டர் அதுதானா? எம்.ஜி.ஆர்., ரூட்டை ஃபாலோ செய்யும் எஸ்.டி.ஆர்., - சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

சென்னை: தமிழ் சினிமாவில் அதிக விமர்சனங்களுக்கு ஆளான நடிகர்களை பட்டியலிட்டால் அதில் சிம்புவின் பெயர் கட்டாயம் டாப் லிஸ்ட்டில் இருக்கும். இவர்மீது வைக்கப்படாத குற்றச்சாட்டுகளோ அல்லது விமர்சனங்களோ இல்லை எனும் அளவிற்கு சிம்பு குறித்த விமர்சன கிசுகிசுக்களும் செய்திகளும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கொட்டிக் கிடக்கின்றது எனலாம். தனிப்பட்ட விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருகின்றார் என்றும், படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கமே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றது.

அண்மையில் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் போடப்பட்ட தீர்மானத்தில் சிம்பு மட்டும் இல்லாமல், உலக நாயகன் கமல் ஹாசன், தனுஷ் மற்றும் விஷால் ஆகியோருக்கு எதிராகவும் தீர்மானம் போடப்பட்டது. ஆனாலும் மற்ற நடிகர்களைக் காட்டிலும் சிம்பு மீதுதான அதிகப்படியான கிசுகிசுக்கள் உலா வருகின்றது.

Simbu Indian 2 Blue Sattai Maran

சிம்பு பதிலடி: இது தொடர்பாக சிம்புவே பல மேடைகளில் பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிம்பு கலந்து கொண்டு மேடையில் நிற்கும்போது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து, " சூட்டிங்கிற்கு டைமிற்கு செல்ல வேண்டும்" என ஒரு குரல் ஒலித்தது. உடனே இதைக் கேட்ட சிம்பு, " சூட்டிங்கிற்கு டைமிற்கு செல்கின்றோமா இல்லையா என்பது முக்கியமில்லை, சரியா வேலை செய்கின்றோமா என்பதுதான் முக்கியம். இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம், வேற யாருகிட்டயாவது வெச்சுக்கனும்" என சில நொடிகளிலேயே பதிலடி கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் இன்றைக்கும் உள்ளது.

Simbu Indian 2 Blue Sattai Maran

இந்தியன் 2: இப்படியான நிலையில், கடந்த மாதம் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக படக்குழு தரப்பில் இருந்தும், கமல் ஹாசன் தரப்பில் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சிம்பு வந்தார். விழா தொடங்கி சிறுது நேரம் கழித்துதான் சிம்பு வந்தார். இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் சிம்புவின்மீது குவிந்ததால், அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

Simbu Indian 2 Blue Sattai Maran

ரசிகர்கள் ஆதரவு: கமல்ஹாசனுக்காக கூடிய கூட்டத்தில் சிம்புவுக்கு இவ்வளவு வரவேற்பா? என திரையுலகமே வியக்கும் அளவிற்கு ரசிகர்கள் அவருக்கு ஆரவாரம் செய்தனர். இதுமட்டும் இல்லாமல், இதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது அந்த படத்தில் நடிக்காத சிம்புவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருந்தது.

Simbu Indian 2 Blue Sattai Maran

பேச்சு: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மேடையில் சிம்பு பேசுகையில், இப்போது கூட நான் தக்லைஃப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் வருகின்றேன். ஆனால் எல்லோரும் வழக்கம்போல் சிம்பு தாமதமாக வந்துவிட்டார் என சொல்லத்தான் போகின்றார்கள்" என பொருள்படும் படி பேசியிருந்தார்.

Simbu Indian 2 Blue Sattai Maran

எம்.ஜி.ஆர்., ஸ்டைல்: சிம்புவின் இந்த பேச்சு தொடர்பான பதிவை ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், " ஷூட்டிங், திரைப்பட நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் சில நிமிடங்களுக்கு முன்பாகவே ஸ்பாட்டிற்கு வருவது சிவாஜியின் வழக்கம். சற்று லேட்டாக சென்றால்தான் உங்களுக்கான வரவேற்பு மக்கள் மத்தியில் எப்படி உள்ளதென மற்றவர்களுக்கு காட்ட முடியும். அதனால் அரசியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு என்னைப்போல கொஞ்சம்தாமதமாக செல்லுங்கள் என அவரிடம் சொன்னார் எம்ஜிஆர்." என பதிவிட்டுள்ளார். இதனால் எம்.ஜி.ஆர். ஸ்டைலை சிம்பு பின்பற்றுகின்றாரா என பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X