Vettaiyan Blue Sattai Maran: வேட்டையன் குறித்து ப்ளூ சட்டை மாறன்.. என்னங்க இப்படி சொல்லியிருக்காரு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தினை, ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 170வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது. இந்நிலையில் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

வேட்டையன் படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். வேட்டையனில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்,மலையால சினிமாவின் நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் , ராணா டகுபதி , அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படக்குழு சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட மனசிலாயோ பாடலும் ஹண்டர் வன்ட்டார் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இணையத்தில் எங்கு திரும்பினாலும் ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள் வரை அனைவரும் மனசிலாயோ பாடலுக்கு ரீல்ஸ் நடனம் ஆடி வெளியிட்டு பாடலை உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். இந்த பாடல் படத்தினை மக்கள் மத்தியில் வெகு எளிமையாகக் கொண்டு சென்றது.

rajinikanth vettaiyan blue sattai maran

படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த 6ஆம் தேதியே தொடங்கியது. புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் பல திரையரங்குகளில் முதல் நாளுக்கான அனைத்து காட்சிகளும் புக் ஆனது. அதேநேரத்தில் புக்கிங் தொடங்கப்பட்ட இடத்தில் எல்லாம் மதியம் 12 மணி காட்சிகளுக்குத்தான் தொடங்கப்பட்டது. இதனால் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் நாடு அரசு காலை 9 மணிக் காட்சிக்குத்தான் அனுமதி அளித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்திருந்தால், விஜய் ரசிகர்கள் கோட் படத்திற்கு ஏன் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருக்கக் கூடும் என்ற பேச்சு எழுந்தது.

சிறப்புக் காட்சி: இந்நிலையில் நேற்று காலை 9 மணிக் காட்சிக்கு அனுமதி கிடைத்ததும், ரசிகர்கள் டிக்கெட்டுகளை உடனடியாக புக் செய்தனர். சென்னை ரோகினி திரையரங்கில் அனைத்து டிக்கெட்டுகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்தது. இதுமட்டும் இல்லாமல் இந்தத் தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் வெளியானது. ஆனாலும் படம் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1000 ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

rajinikanth vettaiyan blue sattai maran

ப்ளூ சட்டை மாறன்: பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் வழக்கமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை எதாவது காட்டமாக விமர்சித்து பதிவிட்டு வருவார். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு விமர்சனம் செய்யும்போது மிகவும் காட்டமாக தனது தனிப்பட்ட கருத்துக்களையும் முன் வைத்து வருகின்றார் என சூப்பர் ஸ்டார் ரசிகர்களே கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோட் படத்தின் ரிலீஸின் போது கூட சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் குறித்து காட்டமான கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

புது போஸ்ட்: அதாவது கோட் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 126.32 கோடிகள் என படக்குழு தெரிவித்தது. உடனே இதுகுறித்த தகவலைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 150 கோடிகள் என போஸ்டரை இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள் என அப்போதே போஸ்ட் போட்டிருந்தார். வழக்கமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை காட்டமாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி, வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியில், 'இன்று முதல்.. தலைவரின் ஆட்டம் ஆரம்பம்' என போஸ்ட் செய்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

rajinikanth vettaiyan blue sattai maran

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X