Kanguva: வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா? பிரபலத்தின் கமெண்ட்டால் ரசிகர்கள் கோபம்
சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மேலும், சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அதாவத் ஆகஸ்ட் 31ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் நக்கலாக விமர்சனம் செய்துள்ளார்.
கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா ஏற்கனவே ஒரு பேட்டியில், படத்திற்கு ஹிந்தி சினிமா உலகம் வரை பெறும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் சூர்யா திரை வாழ்வில் இதுவரை இல்லாத அளவிற்கான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும். ஆனால் அதே தேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படம் ரிலீஸ்க்கு வந்தால், நாங்கள் ரிலீஸ் செய்ய மாட்டோம். சூப்பர் ஸ்டாரின் மீது எங்களுக்கு பெரும் மதிப்பு உள்ளது. அதற்காகவே நாங்கள் அவரது படத்துடன் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 10: கங்குவா படக்குழுவினர் முதலில் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகின்றது என்ற அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில், கடந்த வாரத்தில் வேட்டையன் படக்குழுவினர், வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவித்தனர். இரண்டு படங்களுமே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமாகினர்.

கங்குவா ரிலீஸ்: இப்படியான நிலையில், மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை எனக் கூறினார். குறிப்பாக அவர் பேசுகையில், " கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. எனவே சூப்பர் ஸ்டார்க்கு மரியாதை செய்வதே சரியாக இருக்கும். கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன். இந்த நிலையில், நீங்கள் (ரசிகர்கள்) என்னுடன் இருப்பீர்கள் என நினைக்கின்றேன்" எனக் கூறினார்.

ப்ளூ சட்டை மாறன்: சூர்யாவின் இந்தப் பேச்சு அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " போட்டி என்று வந்துவிட்டால் தைரியமாக மோத வேண்டும். தள்ளிப்போவதற்கு..கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லக்கூடாது. 2019 பொங்கல் ரிலீஸ். 'பேட்ட',யுடன் மோதி அதிக வசூலை பெற்றது விஸ்வாசம். வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா?" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது சூர்யா ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











