Vijay: பனையூர் பண்ணையார் எனும் இமேஜை உடைப்பாரா விஜய்? ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: இன்று அதாவது டிசம்பர் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசியலின் திசை வழிப்போக்கினை தீர்மானித்த தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள். எனவே நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று பெரியாரின் சிலைக்கு மரியாதை செய்யாமல், அவரது உருவப் படத்திற்கு விஜய் மரியாதை செய்தது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் களமிறங்க திட்டம்போட்டு அதற்கான பணிகளிலும் ஈபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. நடிகராக இருந்த வரையில் நடிகர் விஜய் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் இருந்ததில்லை. ஆனால் இப்போது அரசியல் களத்தில் அவர் காலடி எடுத்து வைத்த பின்னர், அவர் சந்திக்கின்ற, விமர்சனங்கள் ஏராளாம். கட்சி தொடங்கிய பின்னர் மக்களைச் சந்திக்காத விஜய், பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து அறிக்கைகளே வெளியிட்டு வந்தார். இதனால் அவர் மீது விமர்சங்கள் எழுந்தது.

சில வாரங்களுக்கு முன்னர், சென்னையில் கடும் வெள்ளம் வந்தபோது கூட, வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்க்கவில்லை. மாறாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தனது, பனையூர் வீட்டிற்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழன்கினார். இது பெரும் விமர்சனத்தை அவர் மீது வைக்க காரணமாக அமைந்தது. இதனால், இணையத்தில் இருக்கும் சிலர், அவரை பனையூர் பண்ணையார் என விமர்சித்தனர். ஒரு சிலரோ, 'அரசியலை என்னங்க, நீங்க வொர்க் ஃப்ரம் ஹோம்'ல பண்ணீட்டு இருக்கீங்க எனவும் விமர்சித்தனர்.

ப்ளூ சட்டை மாறன்: இப்படியான நிலையில் இன்று தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளான இன்று, பெரியாரின் புகைப்படத்திற்கு, தனது பனையூர் இல்லத்தில், பெரியாரின் உருவப்படத்தினை வைத்து மரியாதை செலுத்தினார். இது விஜய் மீதான பனையூர் பண்ணையார் என்ற விமர்சனத்தை மீண்டும் தொடர்ந்தனர். இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பயம்: அதில் அவர், " பனையூர் பண்ணையார்: செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்த நாளுக்கு சென்னை பெரியார் திடலுக்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார், விஜய். ஆனால் இன்று பெரியாரின் நினைவு நாளுக்கு பனையூர் ஆபீஸில்..பெரியார் ஃபோட்டோவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கனமழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செல்லாதது, தன் ரசிகர், தொண்டர்கள் இறந்தால் நேரில் போகாதது, நிருபர்களை சந்திக்காதது, கண்டன அறிக்கைகளில் அரசியல் கட்சி மற்றும் தலைவர்களின் பெயரை குறிப்பிட பயப்படுவது என அடுக்கடுக்காக விமர்சனங்கள் இவர்மீது வந்து கொண்டிருக்கிறது.

பனையூர் பண்ணையார்: தற்போது... தனது கொள்கை தலைவரின் சிலைக்கு கூட நேரில் மரியாதை செலுத்தவில்லை எனும் விமர்சனமும் சேர்ந்துள்ளது. வெளியே வந்தால் கூட்டம் கூடி விடும் எனும் ஒற்றை சால்ஜாப்பை இந்த அனைத்து கேள்விக்கும் பதிலாக வைத்துள்ளார் போல. நிவாரணம் வாங்கும் மக்களாக இருந்தாலும், கொள்கை தலைவர் பெரியாராக இருந்தாலும்.. தனது ஆபீஸ்க்கு வந்தால்தான் மரியாதை தரப்படும் என்கிறாரா இந்த பனையூர் பண்ணையார் என பிற கட்சியினர் மற்றும் அரசியல் நிபுணர்கள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். பனையூர் பண்ணையார் எனும் இமேஜை உடைப்பாரா விஜய்?" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











