Vijay Sethupathi: விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை அட்டாக் செய்யும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: தமிழ் நாட்டில் உள்ள திரைப்பட விமர்சகர்களில் அதிகப்படியான மக்கள் கவனத்தைப் பெற்ற விமர்சகர்களில் ஒருவர் ப்ளு சட்டை மாறன். இவர் ஒரு படத்திற்கு கொடுக்கும் ரிவ்யூவை வைத்து படத்தைப் பார்க்கலாமா இல்லை வேண்டாமா என யோசித்து முடிவெடுக்கும் சினிமா ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர் படங்களுக்கு ரிவ்யூவ் செய்வது மட்டும் இல்லாமல் அரசியல் நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா படம் தொடர்பான தகவலுக்கு போஸ்ட் போட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. இந்த 6 மாதங்களில் இதுவரை 100இல் இருந்து 150 படங்கள் வரை ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆறு மாதங்களில் ரிலீஸ் ஆன படங்களில் அதிகமான வசூலைக் குவித்த படங்களாக அதாவது ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படங்களாக இயக்குநர் சுந்தர்.சி-யின் அரண்மனை, சூரியின் கருடன் மற்றும் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ஆகிய படங்கள் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக செய்திகள் ஏற்கனவே வெளியானது. இதில் மகாராஜா படம் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

Bule Sattai Maran Vijay Sethupathi Maharaja

ப்ளூ சட்டை மாறன்: இந்த செய்திகள் தொடர்பாக சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். அதில், அரண்மனை 4, மகாராஜா ஆகிய இரண்டு படங்களுமே ரூபாய் 100 கோடி வசூல் இல்லை. மனசாட்சியோட உருட்டுங்க" என பதிவிட்டிருந்தார்.

100 கோடி: இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பதிவு விஜய் சேதுபதியின் மகாராஜா படம் தொடர்பாக இணையத்தில் உலா வருகின்றது. அதில். " படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களில் படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்து விட்டதாகவும். மேலும் படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் சோலோ ஹீரோவாக விஜய் சேதுபதி 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Bule Sattai Maran Vijay Sethupathi Maharaja

நியாய தர்மம்: தற்போது இந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், " அண்டப்புளுகாவே இருந்தாலும்.. ஒரு நியாய தர்மம் வேணாமாடா" என பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் ரோமியோ படம் ரிலீஸ் ஆனதில் இருந்து ப்ளூ சட்டை மாறனுக்கும் விஜய் ஆண்டனிக்கும் சமூக வலைதளங்களில் வாக்குவாதம் நடைபெற்றது. குறிப்பாக ரோமியோ படத்தை சுமாரான படம் என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விஜய் ஆண்டனி பதில் கொடுக்க வாக்கு வாதம் தொடங்கியது.

Bule Sattai Maran Vijay Sethupathi Maharaja

விஜய் ஆண்டனி டூ விஜய் சேதுபதி: கடந்த வாரம் நடிக்கவே தெரியாத நடிகர்கள் யார் என கேள்வி கேட்டு எக்ஸ் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார் ப்ளூ சட்டை மாறன். அதில் விஜய் ஆண்டனியின் பெயரைச் சேர்த்திருந்தார். இப்படி தொடர்ந்து விஜய் ஆண்டனியை சீண்டி வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது விஜய் சேதுபதியை அட்டாக் செய்ய தொடங்கிவிட்டார் என இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X