ரஜினி, சத்யராஜ் மன்னிப்பு கேட்டிருக்காங்க.. மிரட்டலுக்கு அடிபணியாத ஒரே நடிகர் கமல்.. ப்ளூ சட்டை மாறன் பளிச்!

சென்னை: தென்னிந்திய திரையுலகில் தற்போது கவனிக்கப்படும் விஷயமாக இருப்பது, கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாக மாறியிருப்பது தான். கமல்ஹாசன் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டால்தான் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிடுவோம் என கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் தெரிவித்தார். ஆனால் கமல்ஹாசனோ மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, மிரட்டலுக்கு அடிபணிபவன் நான் இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.

இப்படியான நிலையில் இயக்குநர் மற்றும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், மன்னிப்பு கேட்க முடியாது என்பதை குறிப்பிட்டு, இது போன்ற பிரச்னையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். ஆனால் கமல்ஹாசன் மட்டும் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் தக் லைஃப் படம் மட்டும் இல்லாமல், கமல்ஹாசனின் எந்த படமும் கர்நாடகாவில் வெளியாவது சிக்கல்தான் என்று தெரிவித்துள்ளார்.

Blue Sattai Maran X Post Compares Kamal Haasan Brave statement and Rajinikanth Sathyaraj apologies

பிரச்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குசேலன் மற்றும் காலா ஆகிய படங்கள் வெளியாவதற்கு முன்னர் கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். அதேபோல் பாகுபலி 2 படத்தின் வெளியீட்டின் போது சத்யராஜ் மன்னிப்பு கேட்டிருந்தார். காவி நீர் விவகாரத்தில் சத்யராஜ் பேசிய பழைய வீடியோவை இணையத்தில் பரப்பி, பாகுபலி 2 படத்தின் ரிலீஸின் போது படக்குழுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்நிலையில், தந்தால் யாரும் நஷ்டம் அடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மன்னிப்பு கேட்பதாக சத்யராஜ் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில், சத்யராஜை வைத்து படம் எடுத்தால் இது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் என்னை அணுக வேண்டாம் என்றும், நான் நடிகன் என்பதை விடவும் முதலில் பெருமைமிகு தமிழன் என்று தெரிவித்திருந்தார்.

மன்னிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்ட நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் தக் லைஃப் படத்தின் தயாரிப்பாளரே கமல்ஹாசன் தான். எனவே, மன்னிப்பு கேட்க படக்குழு தரப்பில் இருந்தும் யாரும் அவருக்கு நெருக்கடி கொடுக்க மாட்டார்கள் என்று பேசி வருகிறார்கள். அதே நேரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால், அது தமிழ் மொழியை விட்டுக் கொடுத்ததாக மாறிவிடும் என்றும் பேசிவருகிறார்கள்.

Blue Sattai Maran X Post Compares Kamal Haasan Brave statement and Rajinikanth Sathyaraj apologies

ரஜினி - சத்யராஜ் - கமல்: கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை என்றாலும், அங்கு படம் எவ்வளவு வசூலிக்கும் என்ற தோராய கணக்கு கமலுக்கு தெரியும் அதனை வேறு விதமாக வியாபாரம் செய்து கொள்வார் என்றும் பேச்சுகள் அடிபடுகிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " மன்னிப்பு கேட்காவிட்டால் உங்கள் படம் ரிலீஸாகாது என கர்நாடகாவில் இருந்து எச்சரிக்கை வந்த போது ரஜினி, சத்யராஜ் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்டது தான் வரலாறு. ஆனால் அதற்கு அடிபணியாத முதல் நடிகர் கமல்தான். இனி இவரது நடிப்பு, தயாரிப்பில் வரும் படங்கள் கர்நாடகத்தில் வெளியாவது கடினமே" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X