அட்லீயின் பிகில் படத்தை காப்பியடித்தாரா தனுஷ்? ராயப்பனை நினைவுபடுத்தும் ராயன் - ப்ளூ சட்டை டீகோட்!
சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். இந்த படம் தனுஷின் 50வது படம். தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி என்ற படத்தினை இயக்கியுள்ளார். தனுஷ் தற்பொழுது இயக்கி நடித்துள்ள படம் ராயன் நேற்று அதாவது ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் படத்தினைப் பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் ஓப்பனிங் கிடைத்துள்ளது எனக் கூறும் அளவிற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடினர்.
படத்தினை அதிகாலை 6 மணிக் காட்சிகளுக்கு அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று திரையிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் அதிகாலை 6 மணிக் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். படம் முடிந்த பின்னர் பால்கனியில் இருந்து ரசிகர்களி நோக்கி கை அசைத்தார். தனுஷைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தனர். ரசிகர்கள் ராயன் படத்தைக் கொண்டாடியதைப் பார்த்த தனுஷ் தனது இரண்டு கரங்களையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது நெற்றிக்கு நேராக சில வினாடிகள் கையெடுத்து கும்பிட்ட தனுஷ் கிட்டத்தட்ட எமோஷ்னல் ஆகிவிட்டார்.

குத்தூசி கோவிந்தன்: படத்தைப் பார்த்த விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், " படத்திற்கு ராயன் என்று பெயர் வைத்தற்கு பதிலாக கோவிந்தன் என்று பெயர் வைத்து இருந்தால் சரியாக இருந்து இருக்கும். ஏன்னா, படத்தில் வில்லனை பழிவாங்குகிறேன் என்று, கையில் ஒரு குத்தூசியை வைத்துக்கொண்டு அனைவரையும் குத்தி குத்தி கொலை செய்கிறார். இதனால், குத்தூசி கோவிந்தன் என் பெயர் வைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
இந்த படத்தை பத்தி படத்தின் இயக்குநர் தனுஷிடம் படத்தில் என்ன சொல்ல வரீங்க என்று கேட்டால், நிச்சயமா பதிலே இருக்காது. படத்தில் ஹீரோ நிம்மதியா இல்ல, வில்லன் நிம்மதியா இல்ல, படம் பார்க்கும் நாமும் நிம்மதியா இல்ல, இப்படி படம் முழுக்க அவலமா இருந்தால், படம் பார்ப்பவர்கள் எப்படித்தான் ரசிப்பது" என படம் குறித்த விமர்சன வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

ப்ளூ சட்டை மாறன்: அதன் பின்னரும் தொடர்ந்து படத்தை விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், 'வடசென்னை, புதுப்பேட்டையை எல்லாம் தனுஷ் ஓவர்டேக் பண்ணிட்டாரு செட்டியார். மொத்த படமும் தெறி மாஸ். மூணு தடவ பாக்கலாம்' என சதுரங்க வேட்டை படத்தின் காட்சியை எடுத்துக்காட்டி பங்கமாக கலாய்த்து இருந்தார்.

அட்லீ: இந்நிலையில் தற்போது, சார்பட்டா பரம்பரை படத்தில் வரக்கூடிய தனிகா கதாப்பாத்திரத்தின் டெம்ளேட்டை வைத்து, ராயன் கதாபாத்திரம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் இடம் பெற்றிருந்த ராயப்பன் கதாபாத்திரத்திடம் இருந்து சுடப்பட்ட கதாபாத்திரம் என மீம் போட்டுள்ளார். இதில் தனிகா கதாபாத்திரம் கோபத்தில் இருப்பது போன்ற இமேஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் இயக்குநர் அட்லீ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், அந்த மீம் பதிவுக்கு கேப்சனாக 'சுட்டவன் கிட்டயே சுடுறது' எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தனுஷ் ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. மேலும் ப்ளூ சட்டை மாறனை பின் தொடர்பவர்கள் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











