Kuberaa: குபேராவுக்கு விழும் அடி.. இவங்க மூன்று பேரும் செம ஹேப்பியாம்.. கோர்த்து விடும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி நேற்று அதாவது ஜூன் 20ஆம் தேதி வெளியான படம் குபேரா. இந்த படத்தின் பிரதான கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளார். இவரோடு இந்த படத்தில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் கதை நன்றாக உள்ளது என்றாலும் திரைக்கதை மற்றும் படத்தின் நீளம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் படத்தில் பல லாஜிக் மிஸ்டேக்குகள் உள்ளது எனவும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் எதிர்மறை விமர்சனத்தைப் பார்த்து ஒரு கதாநாயகி மற்றும் இரண்டு கதாநாயகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

குபேரா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கியதாக படக்குழு கூறினாலும், தெலுங்கு படத்தை தமிழில் டப் செய்து பார்த்ததைப் போலத்தான் இருந்தது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். தனுஷ் தனது அட்டகாசமான நடிப்பினால் படத்தை தாங்கும் தூணாக நிற்கிறார். ஆனாலும் படம் 3 மணி நேரத்திற்கு ஓடுவது சலிப்பு ஏற்படுத்துகிறது. பல காட்சிகளில் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று படம் பார்க்க பார்க்கவே தோன்றுகிறது. குறிப்பாக ஒரு லாரி நிறைய பணத்தை சாலையில் கொட்டுகிறார்கள். அதைப் பார்க்க 30, 40 பொது மக்களும், பாதுகாக்க 5,6 போலீஸ் இருக்கும் காட்சி எல்லாம் ஒட்டவில்லை.

Blue Sattai Maran X Page Post About Nayanthara Simbu Sivakarthikeyan Happy For Kuberaa Negative Reviews
Photo Credit:

நயன் - சிம்பு- சிவகார்த்திகேயன்: இந்நிலையில் விமர்சகர்கள் மத்தியிலும் படத்தின் பிளஸ் மைனஸ்கள் விரிவாக பேசப்பட்டு வருகிறது. படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறிவிடும் என்று கூறப்பட்டாலும் லாஜிக் மிஸ்டேக்குகள் ஒரு நல்ல படத்தை பத்தோடு பதினொன்றாவது படமாக மாற்றி விடும் என்பதற்கு குபேரா படமும் ஒரு சாட்சி.

மறைமுகப் பெயர்: படத்தின் எதிர்மறையான விமர்சனங்களை பார்த்து, நடிகை நயன்தாரா நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் என மூவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்க பதிவில் இவர்கள் மூவரின் பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அதாவது நயன்தாராவின் பெயரை Nose piercing நாயகி எனவும், சிவகார்த்திகேயன் பெயரை Opposite Swimming எனவும், சிம்புவின் பெயரை Burned out forest எனவும் குறிப்பிட்டுள்ளார் என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.

ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்: அவரது எக்ஸ் பக்கத்தில், "குபேரா படத்தின் ரிப்போர்ட்டை கேட்டு...‌Nose piercing நாயகியும், Opposite Swimming மற்றும் Burned out forest நாயகர்களும் குஷியாக உள்ளனராம். - காயங்குளம் கொச்சுண்ணி பழைய பத்திரிக்கையாளர்" என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது இந்த பதிவுக்கு, அவர் குறிப்பிட்டுள்ள மறைமுக பெயர்கள் யாரை குறிக்கிறது என்பதை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ப்ளூ சட்டை மாறன் வேண்டுமென்றே கோர்த்து விடுகிறார் எனவும் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X