கூலியை காலியாக்கிய ப்ளூ சட்டை மாறன்.. விமர்சனத்தில் விட்டு விளாசிட்டாரே ப்பா!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. உச்சக்கட்ட ஹைப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் படம் கனெக்ட் ஆகியிருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூலி படத்தின் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதன்முறையாக இரண்டு பேரும் சேர்ந்திருப்பதால் இப்படத்தின் மீது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே கவனத்தை வைத்திருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் ஆகிய திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமாரான வரவேற்பு: இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை சுமந்துகொண்டு படத்துக்கு ரசிகர்கள் சென்றார்கள். வழக்கம்போல் ரஜினி பட முதல் நாள் முதல் ஷோவை திருவிழா போல் கொண்டாடினார்கள் அவர்கள். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே கனெக்ட் ஆகிவிட்டது. ஒவ்வொரு சீனிலும் ரஜினிக்கு தேவையான அத்தனை மாஸ் மொமண்ட்ஸையும் லோகி வைத்துவிட்டதாக புகழ்ந்துவிட்டனர்.

Blue Sattai Maran s Coolie Review He Trolls Lokesh Kanagaraj and Rajinikanth severely
Photo Credit:

கனெக்ட் ஆகவில்லை: அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் கொஞ்சம் டல்தான். எந்த இடத்திலும் படம் எங்களுக்கு கனெக்ட் ஆகவில்லை. படத்தின் கதை அரத பழசு; திரைக்கதை அதைவிட மோசம். லோகேஷ் கனகராஜுக்கு லியோ படத்துக்கு அடுத்து இந்தப் படமும் தோல்விதான் என்று கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "நண்பன் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்க ஹீரோ வருவதுதான் இந்தப் படத்தின் கதை. பான் இந்தியா படம் என்றால் நேட்டிவிட்டியோடு எடுத்து அது நம் ஊரிலும் ஹிட்டாக வேண்டும்; இந்திய அளவிலும், உலக அளவிலும் ஹிட்டாக வேண்டும். அதுதான் பான் இந்தியா ஹிட் என்று சொல்லப்படும். ஆனால் ரஜினியோ மற்ற மொழி நடிகர்களை தன் படத்தில் சேர்த்துவிட்டு பான் இந்தியா படம் என சொல்கிறார்.

லோகேஷுக்கு அது தெரியாது: உடனே இயக்குநரிடம் இந்த ஸ்டார்கள் எல்லாம் படத்தில் இருக்கிறார்கள். எனவே அதற்கு தகுந்தபடி கதை எழுதி வரவும் என்று சொல்லியிருப்பார்கள் போல. கிராமத்தில், 'கறி வாங்க காசு இல்லாதவனே கருவாட்டை கண்டுபிடித்திருப்பான்' என்று சொல்வார்கள். அதுபோல் கதை எழுத துப்பு இல்லாத ஒருவர்தான் இந்தக் கதையை எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. லோகேஷ் கனகராஜுக்கு கொலை, கஞ்சா, பவுடர் கடத்துவதை தவிர்த்து எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட லோகேஷ், இந்த மூன்று மணி நேரத்தை ரசிகர்கள் எப்படி கடத்துவார்கள் என்பதை யோசித்து படம் எடுத்திருந்திருக்கலாம்.

காட்டு மொக்கை: நாகார்ஜுனாவை ஸ்டைலிஷ் வில்லனாக காண்பித்திருக்கிறார்கள். அவருக்கு கீழே சௌபின் சாஹிரை காண்பிக்கிறார்கள். இரண்டு பேரில் சௌபின் மட்டுமே கிடைத்த கேப்பில் ஏதோ செய்திருக்கிறார். ரஜினி நடத்தும் மேன்ஷனில் எதற்காக சிலர் உள்ளேயே இருக்கிறார்கள் என தெரியவில்லை. உபேந்திரா எல்லாம் எவ்வளவு பெரிய டெக்னீஷியன். அவரை அழைத்து வந்து நாசம் செய்திருக்கிறார்கள். அவர் யார் என்றே தெரியவில்லை. கடைசியில் அமீர் கான் வருகிறார். அவர் வந்து பீடியின் சுவைகளை பற்றி பேசுகிறார். இந்தப் படத்தால் ஜெயிலர் படம் நல்ல படமாகிவிட்டது. பொதுவாக மொக்கை படம் என்று நினைத்து போய் பார்த்தால் அந்தப் படம் நன்றாக இருக்கும். இப்படத்தை நீங்கள் காட்டு மொக்கை என்று நினைத்து பார்த்தாலுமே உங்களுக்கு படம் பிடிக்காது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X