பிரதீப் ரங்கநாதனின் டியூட்.. பாக்யராஜ் படம் மாதிரி இருந்தது.. ப்ளூ சட்டை மாறனின் சூப்பர் விமர்சனம்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் நேற்று வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. முதல் நாளில் இந்தியாவி மட்டும் பத்து கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. டிராகன் படத்தைவிடவும் முதல் நாள் வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
2கே கிட்ஸ்களின் ஸ்டாராக மாறியிருக்கும் பிரதீப் ரங்கநாதன் பக்கா ஹீரோ மெட்டீரியலாக மாறிவிட்டார். அவர் நடித்த லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் நூறு கோடி ரூபாய் வசூலித்து அதகளம் செய்தது. அவர் மூன்றாவதாக கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். மமிதாவுக்கு இதுதான் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் சூப்பர்: படம் பார்த்த ரசிகர்கள் நன்றாகவே கொண்டாடிவருகிறார்கள். கமர்ஷியல் படத்தில் ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்லும் ஃபார்முலாவை இயக்குநர் தனது முதல் படத்திலேயே சிறப்பாக கையாண்டிருக்கிறார் என்ற பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. அதேபோல் டிராகன் படத்திலும் இதே ஃபார்முலாவில் நடித்த பிரதீப் இதிலும் அதை ஃபாலோ செய்திருப்பது நல்ல விஷயம் என்று அவருக்கும் வாழ்த்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

டிராகனை முந்திய டியூட்: வசூலிலும் முதல் நாளில் அடித்து துவம்சம் செய்திருக்கிறது படம். முதல் நாளான நேற்று இந்தியாவில் மொத்தம் பத்து கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் பிரதீஇப் நடித்திருந்த டிராகன் திரைப்படம் முதல் நாளில் ஆறு கோடி ரூபாய் வசூலித்தது. அதனை டியூட் திரைப்படம் அசால்ட்டாக முந்தியிருக்கிறது. இதனால் PR ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் டியூட் விமர்சனத்தை கூறியிருக்கிறார். அவர் தனது விமர்சனத்தில், "டியூட் படத்தை விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தாலும் கொஞ்ச நேரத்திலேயே சீரியஸ் ஆகிவிட்டது. அதற்கு பிறகு கதையில் நிறைய டர்ன் ட்விஸ்ட்டுகள் இருக்கின்றன. இடைவேளை சமயத்தில் முதல் பாதில் ரொம்பவே க்ரிப்பாக முடிந்திருந்தது. பாக்யராஜ் படம் பார்த்தது மாதிரி இருந்தது.
நேர் எதிராகிவிட்டது: முதல் பாதி எவ்வளவு நன்றாக இருந்ததோ அதற்கு நேர் எதிராக மாறிவிட்டது இரண்டாம் பாதி. ஏனெனில் கதையை ஆரம்பித்துவிட்டு அதற்குரிய தீர்வை சொல்ல முடியாமல் சுத்தி சுத்தி வந்ததுதான் காரணம். வலுக்கட்டாயமாக ஒரு க்ளைமேக்ஸை கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் ஆரம்பித்த கதைக்கு இது க்ளைமேக்ஸ் இல்லை. இரண்டாம் பாதி வீக் ஆனதற்கு, ஹீரோயின் கேர்க்டரை டிசைன் செய்த விதமும், பாரி என்ற கேரக்டரை டிசைன் செய்த விதமும்தான் காரணம்.
சுப்ரீம் ஸ்டார் சூப்பர்: அதேபோல் எந்த பிரச்னை வந்தாலும் அதை ஹீரோதான் தூக்கி சுமக்கிறார். இப்படி சில பிரச்னைகள் இருந்தாலும் படம் எங்கேயும் போர் அடிக்கவில்லை. சரத்குமார் கேரக்டரும், அவர் நடித்த விதமும் பிரமாதமாக இருந்தன. அதேபோல் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பும் நன்றாக இருந்தது. எல்லோரும் கன்வின்ஸ் ஆகும் மாதிரியான ஒரு க்ளைமேக்ஸை இவர்கள் வைக்காவிட்டாலும் இடையில் எழுந்து ஓடிப்போக முடியாத மாதிரி ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











