ஜவானை அந்த துவை துவைச்சாரே ப்ளூ சட்டை மாறன்.. அனுஷ்கா படத்துக்கு என்ன விமர்சனம் தெரியுமா?

சென்னை: ஜவான் திரைப்படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என ப்ளூ சட்டை மாறன் எத்தனை படங்களில் இருந்தெல்லாம் அட்லீ சுட்டு எடுத்திருக்கிறார் என படம் பார்க்கும் போதே ரொம்ப சிந்திக்க வைத்து அதை நினைத்து சிரிக்கவும் வைத்துள்ளது என ஸ்டாண்ட் அப் காமெடியனாகவே மாறிய ப்ளூ சட்டை மாறன்.

நவின் பொலிஷெட்டி ஸ்டாண்ட் அப் காமெடியனாக அனுஷ்கா படத்தில் நடித்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்திற்கு என்ன மாதிரியான விமர்சனத்தை கொடுத்திருக்கப் போகிறார் என பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

Blue Sattai Marans positive review for Anushkas Miss Shetty Mr Polishetty

ஜவானை துவைத்து எடுத்த ப்ளூ சட்டை மாறன்: அட்லீ இயக்கிய ஷாருக்கானின் ஜவான் படத்தில் 6 பெண்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு ஃபிளாஷ்பேக் சொல்றேன் என பிளேடு போட்டு விட்டார் அட்லீ என பங்கம் பண்ண ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தில் லாஜிக் என்றால் எத்தனை கிலோ என கேட்பது போலத்தான் இருக்கு என்றும் இந்த படத்துக்கு ஜெயிலர் என டைட்டில் வைத்திருக்கலாம் என போகிற போக்கில் டபுள் கோல் அடித்து விட்டார்.

அனுஷ்கா படத்துக்கு என்ன ரிவ்யூ: இயக்குனர் மகேஷ்பாபு இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா நடித்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் நேற்று ஜவான் படத்துக்கு போட்டியாக வெளியானது. ஷாருக்கானின் ஜவான் அலையால் இந்த படம் வந்ததே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ளார்.

திருமணமே செய்து கொள்ள தேவையில்லை என அம்மாவுடன் வாழ்ந்து வரும் அனுஷ்கா அம்மாவின் இறப்புக்குப் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டு அதை வளர்க்கலாமே என்கிற முடிவுக்கு வருகிறார். தனது குழந்தைக்கு யாரோ ஒருவர் அப்பாவாக இருப்பதற்கு பதிலாக ஒரு சரியான ஆளை தேர்வு செய்து தானே டோனராக கொடுக்கட்டுமா என மருத்துவரிடம் அனுஷ்கா கேட்க மருத்துவரும் அதற்கு ஓகே சொல்கிறார்.

அப்படி அனுஷ்கா தேடிச் செல்லும்போது கிடைக்கும் நபர் தான் ஹீரோ நவீன் பொலிஷெட்டி. ஸ்டாண்ட் அப் காமெடியனாக வரும் ஹீரோ கடைசிவரை துறுதுறுவென திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

பாராட்டிய ப்ளூ சட்டை: இந்த படம் நல்லா இருக்காதுன்னு நினைச்சுதான் பாக்கலாமா வேண்டாமான்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் படம் பார்க்கும்போது புதிய கதையுடன் கடைசிவரை எடுத்துக்கொண்ட கதையை நேர்கோட்டில் கொண்டு சென்று ஒரு முழுமையான படத்தை பார்க்கும் திருப்தியை கொடுத்துவிட்டனர் என ப்ளூ சட்டை மாறன் பாராட்டி உள்ளார்.

நடிகை அனுஷ்காவுக்கு யங் ஹீரோ எப்படி செட் ஆவார் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கதைப் படியே ஐந்து வயது குறைவான நபர் தான் என காட்டுவது சிறப்பு. மேலும் இடைவேளையின் போது பெரிய பேங் வைக்கிறேன் என சொல்லிவிட்டு அதற்கு பின்னர் சொதப்பல் படத்தை எடுத்து கொடுப்பது போல எந்த ஒரு கிரிஞ்சி தனத்தையும் செய்யாதது படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது என போகிற போக்கில் அட்லீயின் ஜவானையும் போட்டுத் தாக்கி விட்டார்.

ஜவான் அலை ஓய்ந்த பின்னர் தியேட்டர்களில் அனுஷ்காவின் படமும் பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X