வடிவேலுவின் மாரீசன்.. பார்த்தது வேஸ்ட் என தோன்றுகிறது.. என்ன ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: வடிவேலு - ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மாரீசன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அவர்களுடன் கோவை சரளா உள்ளிட்ட பிற நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் மாரீசன் படத்துக்கான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
கிருஷ்ணமூர்த்தி எழுதியிருக்கும் கதையை; சுதீஷ் என்பவர் இயக்க மாரீசன் திரைப்படம் உருவானது. ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே வடிவேலுவும், ஃபகத்தும் இணைந்து மாமன்னன் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதிலிருந்தே இதன் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் நடந்தது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும் மாரீசன் படத்தை புகழ்ந்து தள்ளியதால்; ஃபேன்ஸில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்துக்கு சென்றது. சூழல் இப்படி இருக்க நேற்று திரையரங்குகளில் படமானது ரிலீஸானது.

சூப்பர் வரவேற்பு: எதிர்பார்த்தபடியே படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரிய ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக வடிவேலு, ஃபகத் ஆகியோர் மாமன்னன் படத்துக்கு பிறகு; மாரீசனிலும் கலக்கிவிட்டார்கள்; இன்னும் பல படங்கள் அவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று புகழ்கிறார்கள். அதுமட்டுமின்றி படத்தின் கதை பழையதாக இருந்தாலும் இயக்குநரின் திரைக்கதை அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டதாக ஓபனாகவே பேசினார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் பக்கத்தில் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த விமர்சனத்தில் அவர், "பொதுவாக ஒரு படத்தின் திரைக்கதை என்பது; முதல் 20 நிமிடங்களிலேயே அந்தப் படத்தின் மைய கதாபாத்திரங்கள் எதை நோக்கி போகப்போகிறது என ரசிகர்களுக்கு விளக்கிவிட வேண்டும். வடிவேலுவும், ஃபகத்தும் ட்ராவல் செய்வததுதான் கதை என்று படம் ஆரம்பித்தவுடன் நினைத்தால்; இது வேறு கதை என்று இடைவேளைக்கு பிறகுதான் சொல்கிறார்கள்.
அதுவரைக்கும் பார்த்ததே வேஸ்ட்: அதுவரைக்கும் நாம் பார்த்தது வேஸ்ட் என்றுதான் தோன்றுகிறது. இடைவேளைக்கு பிறகு வரும் கதைக்கான லீடை இந்த ஒரு மணி நேரம் சொல்லியிருக்கிறார்கள். 20 நிமிடங்களில் சொல்ல வேண்டியதை ஒரு மணி நேரம் சொல்லியிருக்கிறார்கள். இது படத்தின் பெரிய மைனஸ். முதல் பாதியில் இரண்டு பேரின் நடிப்பு அருமையாக இருந்தது. படத்தின் இரண்டாவது பாதியை பொறுத்தவரை; மைய கதாபாத்திரத்துக்கான பிளாஷ்பேக்கை சொல்கிறார்கள்.
கனெக்ட் செய்யவில்லை: அந்த பிளாஷ்பேக் நம்மை எதிலும் கனெக்ட் செய்யவில்லை. அதில் வந்த சீன்களும் பல படங்களில் பார்த்த சீன்களாகத்தான் இருந்தன. வடிவேலு, ஃபகத் கேரக்டர்களை தவிர்த்து மற்ற எந்த கேரக்டரும் ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை. கோவை சரளா, விவேக் பிரசன்னா கேரக்டர்கள் எல்லாம் தவறான சாய்ஸ்கள். ஃபகத்தும், வடிவேலுவும் வழக்கம்போல் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் லெங்த்தை குறைத்து திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் சூப்பர் படமாக வந்திருக்க வேண்டியது. இப்போது சுமார் படமாக வந்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











