Blue Sattai Maran: காலில் விழுந்த மாணவி... லோகேஷ் மானஸ்தர்... 2K பூமர்ஸ் என கலாய்த்த ப்ளூ சட்டை
சென்னை: விஜய்யின் லியோ பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட லோகேஷ் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார்.
இதனிடையே இருதினங்களுக்கு முன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது தனது காலில் விழுந்து வணங்கிய மாணவியால் மேடையிலேயே கடுப்பானார் லோகேஷ்.
இந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், 2கே பூமர்ஸ் என அந்த மாணவியை கலாய்த்துள்ளார்.

காலில் விழுந்த கல்லூரி மாணவி: மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ், தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்திற்குப் பின்னர் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள லோகேஷ், லியோவில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக கடந்தாண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் அசுரத்தனமான வெற்றி, லோகேஷின் மார்க்கெட் வேல்யூவை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது எனலாம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா ஆகியோர் நடிப்பில் தரமான மல்டி ஸ்டார்ஸ் படமாக விக்ரம் உருவாகியிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் லோகேஷ் ஏராளமான கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

அதன்படி, இரு தினங்களுக்கு முன்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினார். அப்போது மாணவி ஒருவர் லோகேஷ் கனகராஜ்ஜின் காலில் விழுந்தார்.
இதனால் கடுப்பான லோகேஷ் கனகராஜ், மேடையில் வைத்தே அந்த மாணவியை கை நீட்டி கண்டித்தார். இந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், கல்லூரி மாணவியை பங்கமாக கலாய்த்துள்ளார். 2K Boomers என குறிப்பிட்டுள்ள அவர், "லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அம்மாணவியை கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தினுள் பட ப்ரமோஷனுக்காக திரை கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை. இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறப் போகிறதோ!!" என ட்வீட் செய்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் விதவிதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர். பொதுவாக சினிமா பிரபலங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் போக்கு கல்லூரி மாணவ, மாணவிகளிடம் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இதனை தங்களின் கெளரவமாக நினைக்கும் நேரத்தில், லோகேஷ் மட்டுமே இதனை கண்டித்துள்ளார். அவரின் இந்த செயலை பாராட்டியே லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











