twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வன்முறை, ரத்தம், சிகரெட்.. “ஜெயிலர்“ போஸ்டரை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் !

    |

    சென்னை : திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட போஸ்டரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் முதல் படத்திலேயே மகத்தான வெற்றியை கொடுத்தார்.

    இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை எடுத்தார். கடந்தாண்டு ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

     விஜய்க்கு கைதி மாதிரி ஒரு படம் பண்ணனும் தான் ஆசை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! விஜய்க்கு கைதி மாதிரி ஒரு படம் பண்ணனும் தான் ஆசை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

    மோசமான விமர்சனம்

    மோசமான விமர்சனம்

    டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நெல்சன், அவரை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது. பீஸ்ட் படத்தை ரசிகர்கள் இணையத்தில் சகட்டு மேனிக்கு கிண்டல் அடித்தனர். மோசமான திரைக்கதையே இப்படத்தின் தோல்விக்கு காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    ஆகஸ்டில் படப்பிடிப்பு

    ஆகஸ்டில் படப்பிடிப்பு

    பீஸ்ட் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு திரைக்கதை தான் காரணம் என்பதால், திரைக்கதை அமைக்க நடிகர் ரஜினிகாந்த் தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரை அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிடியில் நடைபெறவுள்ளது.

    ஜெயிலர்

    ஜெயிலர்

    இதையடுத்து, தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தக் கறையுடன் கூடிய கத்தி தொங்குவது போல் இடம்பெற்றுள்ள போஸ்டருடன் அதன் தலைப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இப்படம் முழுக்க முழுக்க சிறையில் படமாக்கப்பட்டுள்ளது.

    தவறாக வழி நடத்துகிறார்கள்

    தவறாக வழி நடத்துகிறார்கள்

    இந்நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஜெயிலர் படத்தின் போஸ்டர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு "வன்முறையான முகங்கள், ரத்தம், சிகரெட், போதைப் பொருட்கள், துப்பாக்கி மற்றும் ரத்தம் சொட்டும் கத்தி போன்றவற்றைக் காட்டுவதன் மூலம் இந்த நடிகர்கள் 2k பூமர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வழக்கம் போல விமர்சித்து வருகின்றனர்.

    English summary
    Blue shirt maran criticizes jailer movie poster
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X