நார்த் மாதிரி இல்ல தலைவரே.. இங்க எல்லாமே கஷ்டம்.. எதிர்பார்ப்பை தூண்டிய ஆன்டி இண்டியன் டிரைலர் !
சென்னை : தமிழ் சினிமாவில் ப்ளூ சட்டைமாறனை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்து விடுவார்.
இப்பபடி பல திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இதில் பலரது விமர்சனங்கள் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒரு சில விமர்சனங்கள் திரைத்துறை பிரபலங்களை கோபத்தில் ஆழ்த்தியது.
ப்ளூசட்டை மாறனின் நையாண்டியான பேச்சால் கடுப்பானவர்கள் நீங்கள் ஒரு படத்தை எடுங்க என்று சவால் விடுத்திருந்தனர். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட மாறன், ஆன்டி இண்டியன் என்ற படத்தை எழுதி இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

38 கட்
ஆன்டி இண்டியன் படத்தை பார்த்த தணிக்கை குழு இப்படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி படத்திற்கு தடை விதித்தது. அதன் பின்னர் ரிவிஷன் கமிட்டிக்கு படத்தை போட்டுக் காட்டிய பிறகு 38 கட்கள் அதை பிரித்தால் 200 காட்சிகள் காலியாகும் நிலை ஏற்பட்டதால் படக்குழு நீதிமன்ன்றத்தை நாடியது.

யு/ஏ சான்றிதழ்
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனிக்குழு அமைத்து படத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையிலேயே தற்போது எந்த காட்சிகளும் நீக்கப்படாமல் ஆண்டி இண்டியன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

டிரைலர்
இதையடுத்து, இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில், ஆரம்பமே அமர்க்களம் என்பது போல ப்ளூ சட்டைமாறனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் செய்துவந்த பாஷா என்பவர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்று டிரைலர் தொடங்குகிறது.

நார்த் மாதிரி இல்ல
நம்ப புள்ளைங்கனு சொல்ற நம்ம அடையாளமே இல்லாம இருக்காங்களே எனக் கூறி குங்குமத்தை நெற்றியில் வைப்பதும், நார்த் மாதிரி இல்லத் தலைவரே இங்க எல்லாமே கஷ்டம் என்ற வாசனமும், 20வது வருஷமா இதோ வரேன்... அதோ வரேனு சொல்லி அவரு ரசிகர்களையே ஏமாத்திக்கிட்டு இருக்காரு போன்ற வசனங்களுடன் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











