Blue Star Blue Sattai Review: ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டிய படம்.. ப்ளூ ஸ்டார் ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் நேற்று வெளியானது. பா ரஞ்சித் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜெயக்குமார் என்பவர் இயக்கியுள்ளார். கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

ப்ளூ ஸ்டார் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அரக்கோணம் பகுதியை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம், கிரிக்கெட்டில் நிலவும் ஜாதிய பாகுபாடு குறித்து பேசியுள்ளது. இந்தப் படம் குறித்து விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், ப்ளூ ஸ்டார் இன்னும் நல்லா வந்துருக்க வேண்டிய மூவி என கூறியுள்ளார். அவரது விமர்சனத்தின் படி, "அரக்கோணத்துக்கு பக்கத்துல இருக்குற ஒரு சின்ன கிராமத்துல இரண்டு கிரிக்கெட் டீம் இருக்கு."

 Blue Star Blue Sattai Review: Blue Sattai Maran gave a mixed review of Blue Star Movie

"ஊர்க்காரங்க சேர்ந்து விளையாடுற ஆல்ஃப் டீம், இன்னொன்னு காலணி பசங்க சேர்ந்து விளையாடும் ப்ளூ ஸ்டார் டீம்... இந்த ரெண்டு அணிகளும் பல வருடங்களா மோதிக்கொண்டே இருக்க, இதுக்கு தீர்வு காண ஒரு மேட்ச் ஏற்பாடு செய்யப்படுது. இதுல ஆல்ஃபா டீம் கேப்டன் லோக்கல் கிரிக்கெட் போர்டுல இருந்து கெஸ்ட் பிளேயர்ஸை கூட்டி வந்து ப்ளூ ஸ்டார் அணிய ஜெயிச்சிடுறாரு."

"அப்புறம் தான் அந்த லோக்கல் கிரிக்கெட் போர்டு பத்தி அவருக்கு தெரிய வருது. அவங்க எல்லாருமே ஜாதி ரீதியா மத்தவங்கள மதிக்குறது கிடையாதுன்னு தெரிஞ்சுகிட்டு ஒரு முடிவு எடுக்குறார். அதன்படி ஆல்ஃபா, ப்ளூ ஸ்டார் ரெண்டு கிரிக்கெட் டீமும் சேர்ந்து கிரிக்கெட் போர்டுக்கு எதிரா மேட்ச் விளையாடி ஜெயிக்கணும்ன்னு முடிவு எடுக்குறாங்க. அப்புறம் என்ன ஆச்சுங்குறது தான் கதை" என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

 Blue Star Blue Sattai Review: Blue Sattai Maran gave a mixed review of Blue Star Movie

மேலும், முதல் பாதியில் நல்ல சுவாரஸ்யமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அந்த வேகம் இல்லை. பொதுவாக கிரிக்கெட்டை பின்னணியாக வைத்தும் விளையாட்டில் இருக்கும் ஜாதி அரசியல் பற்றியும் நிறைய படங்கள் வந்துவிட்டன. உதாரணமாக அமீர்கானின் லகான், தங்கல், பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் தனித்துவமாக வெளியாகின. அப்படி எந்த தனித்துவமும் ப்ளூ ஸ்டாரில் இல்லை என விமர்சித்துள்ளார்.

அதேபோல், இரண்டாம் பாதியின் நீளம் படத்துக்கு பெரிய மைனஸ் என்றும், நடிகர், நடிகைகளின் மேக்கப் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை எனவும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டிய ப்ளூ ஸ்டார், ரொம்பவே சுமாரா இருக்கு என விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X