Blue Star Trailer: “உங்களுக்கு இங்க வந்து விளையாட தகுதி கிடையாதுடா” வெளியானது ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர்

சென்னை: அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். ஜெயகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அதிக எதிர்பார்ப்பில் உள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வெளியானது ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர்
அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் லீட் ரோலில் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தை ஜெயகுமார் என்பவர் இயக்கியுள்ளார். பா ரஞ்சித் தயாரித்துள்ள இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. அரக்கோணம் பகுதியின் அடையாள அரசியலையும் ப்ளூ ஸ்டார் படத்தில் பின்னணியாக வைத்து இயக்கியுள்ளார் ஜெயகுமார்.

 Blue Star Trailer: Ashok Selvan and Keerthi Pandian starrer Blue Star Trailer Released

இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அசோக் செல்வன், சாந்தனு இருவருக்கும் இடையேயான மோதலுடன் தொடங்கும் இந்த ட்ரெய்லர், இறுதியாக அடையாள அரசியலை அழுத்தமாக பேசுவதாக உருவாகியுள்ளது. இன்னொரு பக்கம் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் காதலும் ப்ளூ ஸ்டார் படத்துக்கு அதிக சுவாரஸ்யம் கொடுத்துள்ளது.

ரியல் வாழ்க்கையில் கணவன், மனைவியாக வலம் வரும் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் படத்தின் ஷூட்டிங்கின் போது தான் காதலிக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், இப்படத்தில் வரும் காதல் காட்சிகளில் இருவரது கெமிஸ்ட்ரியும் செம்மையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. முக்கியமாக கோவிந்த் வசந்தா இசையில் 'ரயிலின் ஒலிகள்' என்ற பாடல் ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

 Blue Star Trailer: Ashok Selvan and Keerthi Pandian starrer Blue Star Trailer Released

இப்போது ட்ரெய்லரிலும் 'ரயிலின் ஒலிகள்' பாடல் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. அதேபோல், ஜாதி அரசியல் சார்ந்து இடம்பெற்றுள்ள வசனங்களும் கவனம் ஈர்த்துள்ளன. கிரிக்கெட்டில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை மையமாக 'ஜீவா' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இந்தப் படத்தில் அசோக் செல்வன் கேரக்டர் பெயர் ரஞ்சித் என வைக்கப்பட்டுள்ளது. பா ரஞ்சித்தை நினைவு கூறும் விதமாக இயக்குநர் இந்த பெயரை அசோக் செல்வன் கேரக்டருக்கு கொடுத்துள்ளதும் கவனம் ஈர்த்துள்ளது. ஜனவரி 25ம் தேதி வெளியாகும் ப்ளூ ஸ்டார் அசோக் செல்வனுக்கு இன்னொரு வெற்றியாகவும், சாந்தனுவுக்கு கம்பேக் கொடுக்கும் படமாகவும் அமையும் என சொல்லப்படுகிறது. சாக்லெட் பாய் லுக்கில் இருக்கும் இருவரும், ப்ளூ ஸ்டார் படத்துக்காக அப்படியே வித்தியாசமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X