Blue Star vs Singapore Saloon: இந்த வாரமும் டல் அடிக்குமா? டிக்கெட் புக்கிங் இவ்ளோ பச்சையா இருக்கே!

சென்னை: ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 25) வெளியாகின்றன. தைப்பூசம், குடியரசு தினம், சனி மற்றும் ஞாயிறு என இந்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், தமிழ் சினிமாவில் எந்தவொரு பெரிய படமும் வெளியாகவில்லை. ஆனால், இந்த ஜாக்பாட்டை சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்கள் சரியான பயன்படுத்திக் கொள்ளுமா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து வித விதமாக புரமோஷன்களை செய்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தாண்டி அவர் இயக்கிய எந்த படமும் ஓடவில்லை.

 Blue Star vs Singapore Saloon ticket bookings are so dull

சிங்கப்பூர் சலூன் புக்கிங்: இந்த வாரம் ஆர்ஜே பாலாஜி, மீனாக்‌ஷி சவுத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகிறது. புக் மை ஷோவில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், பல திரையரங்குகளில் அனைத்து காட்சிகளுமே பச்சை நிறத்தில் தென்படுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தியேட்டர் ஓனர் மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கும் பெரிய இழப்பாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 Blue Star vs Singapore Saloon ticket bookings are so dull

ப்ளூ ஸ்டார் நிலைமை: ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தை விட ப்ளூ ஸ்டார் படத்தின் நிலைமை அந்தோ பரிதாபம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடிப்பில் உருவாகி உள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை புரமோட் செய்ய சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடத்தி அயோத்தி ராமர் கோயில் பற்றியும் ரஜினிகாந்த் பங்கேற்றது பற்றியும் பேசியிருந்தனர். ஆனால், டிக்கெட் புக்கிங்கில் இதுவரை எந்த ஹைப்பும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதை போல மவுத் டாக் மூலம் நல்ல ரிசல்ட் கிடைத்தால் தான் இரண்டு படங்களும் பிக்கப் ஆகும்.

 Blue Star vs Singapore Saloon ticket bookings are so dull

பொங்கல் படங்களே சொதப்பல்: கடந்த ஆண்டு வாரிசு, துணிவு உள்ளிட்ட படங்கள் வெளியாகி சுமார் 500 கோடி வரை வசூல் ஈட்டிக் கொடுத்த நிலையில், கேப்டன் மில்லர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்கள் ஒட்டுமொத்தமாக 100 முதல் 150 கோடி வசூலை பெற்றுத் தருவதே சந்தேகம் தான் என்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் கிடைத்துள்ள பெரிய வாய்ப்பை பல பெரிய படங்கள் தவற விட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X