கொச்சையான வசனம்?.. விஜய்க்கு வச்ச பொறியில் சிக்கிய உதயநிதி.. குளிர் காயும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சினிமாவில் இருந்து முழுமையாக விலகி அரசியல்வாதியாக களமிறங்கியுள்ள விஜய், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் முக்கிய விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில், மகளிர் தினத்தையொட்டி இன்று விஜய் தனது வாழ்த்தை தெரிவித்தார். இதற்கு ஆதரவு ஒரு பக்கம் வந்தாலும், சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விஜய் நடித்த சிவகாசி படத்தின் காட்சியை பதிவிட்டு புரட்சி இயக்குநர் பேரரசு மற்றும் அப்பாவி விஜய் என இருவரையும் கலாய்த்து பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் கோபம் கொண்டு ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போலத்தான் விஜய் எதை செய்தாலும் எதிர்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. இருந்தாலும் விஜயின் ரசிகர்கள் விட்டு வைப்பார்களா எப்படி நீங்கள் எங்கள் தலைவரை திட்டலாம் என ஒரு பக்கம் கதற தொடங்கியுள்ளனர். விஜய் கட்சி தொடங்கிய பின்பு பலவிதமான முறையில் விமர்சனம் எழுந்து வருகிறது. அதிலும், விஜய் பக்கம் பக்கமாய் வசனம் பேசிய வீடிேயோக்களை எல்லாம் காண்பித்து ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்து வருவது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கடுப்பான ரசிகர்கள்: விஜய் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே விஜயை ப்ளூசட்டை மாறன் வம்புக்கு இழுத்து வருகிறார். பாஜகவை விமர்சிக்காமல் மேம்பூச்சாக பேசுவது என்ன ப்ரோ பாலிடிக்ஸ் ஒரே கன்ப்யூசனா இருக்கு என எக்ஸ் தளத்தில் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டார். அதனை தொடர்ந்து எங்க தவெகவை பாஜக பீ டீம் என சொல்லிடுவாங்க என பயந்துகொண்டு திமுகவுடன் கத்தி சண்டை போடுகிறார். பாஜகவை கிள்ளி வைக்கிறார் என பேசியிருந்தார். உங்களை பாஜகவின் B டீம் என்றே கருத வேண்டியுள்ளது. அதற்குத்தான் இத்தனை உதாரணங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

குடைச்சல்: வடிவேலு வசனத்தை போன்று இவர் தொல்லை தாங்க முடியலை திமுகவை இவர் ரொம்ப குடைச்சலா இருக்கிறார் என நொந்து போகும் அளவிற்கு ப்ளூசட்டை மாறனின் பதிவுகள் கவனத்தை பெறுகிறது. விஜய் நல்ல விசயங்கள் செய்தாலே யாருக்கும் பிடிக்காது என ரசிகர்கள் கதறுவது என் மனசுக்கு கேட்கிறது எனவம் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடிப்பது தான் ஹைலட்டாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு முறையும் விஜயின் அறிவிப்புக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் எதிர்வினை ஆற்றி வருவது தவெகவிற்க மட்டும் அல்ல விஜய் ரசிகர்களுக்கு குடைச்சல் தந்து கொண்டிருக்கிறார் ப்ளூ சட்டை.
மகளிர் தினம்: சிவகாசி படத்தில் விஜய் அசின் அணிந்திருக்கும் அறைகுறை ஆடையை பார்த்து பாடம் எடுப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அதற்கு அப்போது கலவையான விமர்சனங்கள் எழுந்தன. மகளிர் தினமான இன்று விஜய் தனது பங்கிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ப்ளூசட்டைமாறன், அந்த காட்சிகளை பதிவிட்டு, எவ்வளவு கொச்சையான வசனம்? இதை எழுதிய புரட்சி இயக்குனர் பேரரசு தற்போது பாஜகவில் இருக்கிறார். சினிமா மேடைகளில் கலாச்சார பாடம் எடுக்கிறார். பெண்கள் பற்றி இப்படி மிகக்கேவலமாக வசனம் பேசிய விஜய்.. இன்று அப்பாவி போல முகத்தை வைத்தபடி மகளிர்தின வாழ்த்து சொல்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆடை சுதந்திரம்: இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ப்ளூசட்டைமாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே அண்ணன் மாஸ்டர் படத்தில் ஆடை சுதந்திரத்தை பற்றி பேசியுள்ளார். இது உங்க கண்ணுக்கு தெரியலையா ப்ளூ சட்டை மாறன் என கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். எப்போது குற்றத்தை மட்டும் பாக்காதீங்க, அண்ணன் மாறிவிட்டார் எனவும் கேட்டுள்ளனர். ப்ளூ சட்டை மாறனை விஜய் ரசிகர்கள் மோசமான முறையில் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். அதோடு மட்டும் அல்லாமல் இதில் உதயநிதியையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
உதயநிதி செய்வது சரியா: விஜய் அண்ணன் எது செய்தாலும் குற்றம்னா அப்போ உதயநிதி நடித்த படங்களின் போஸ்டர்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். பெண் சுதந்திரத்தை பற்றி உதயநிதி பேசும்போது தளபதி விஜய் பேசக்கூடாதா என்றும் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இதனால் எக்ஸ் தளத்தில் திரியை கொளுத்தி விட்டு ப்ளூ சட்டை மாறன் குளிர் காய்கிறார் என பேச தொடங்கியுள்ளனர்.



Click it and Unblock the Notifications











