அம்புலிமாமா.. சிறுவர் மலரில் வந்துடுச்சு.. விஜய்க்கு எதிராக சீமான் பேச்சு.. ப்ளூ சட்டை மாறன் தாக்கு!

சென்னை: நடிகராக இருந்த விஜய் அரசியல் தலைவராக மாறிய நிலையில், எப்படியாவது அடுத்த ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்று முதல்வர் ஆகணும் என்கிற உறுதியுடன் போராடி வருகிறார். பல வருடங்களாக நாம் தமிழர் கட்சியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பேசி வருகிறார்.

தளபதி.. தளபதி என்று கத்தினாலே தலைவிதி தலைவி என்று தான் கேட்கிறது என்றும், TVK, TVK என்று கூச்சலிட்டால் டீ விக்க, டீ விக்க என்றே கேட்கிறது என்றும் அணில் குஞ்சுகள் என்றும் பகிரங்கமாக விமர்சனங்களை வைத்திருந்தார்.

Bluesattai Maran roasts Seeman and supports TVK Vijay in Kutty story matter
Photo Credit:

ஆனால், விஜய் தவெக மாநாட்டில் மீண்டும் உறுதியாக மற்ற கட்சிகளுடன் சண்டையிடுவது முக்கியமல்ல ஒரே அரசியல் எதிரி திமுக தான் என சொல்லி குட்டிக் கதை ஒன்றை சொன்ன நிலையில், அந்த கதையே நான் சொன்ன கதை தான் என்றும் அதைத்தான் தம்பி விஜய் பேசியிருக்கிறார் என்றும் கூறியிருந்தார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

விஜய் சொன்ன குட்டிக்கதை: இசை வெளியீட்டு விழாக்களில் ரஜினிகாந்தை போலவே விஜய்யும் குட்டிக் கதைகளை சொல்லி வருவது வழக்கம். ஏற்கனவே பல இடங்களில் பல அறிஞர் பெருமக்கள் சொன்ன நன்னெறி கதைகளைத்தான் நடிகர்களும் அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். ராஜா ஒருவர் அடுத்த தளபதியை தேர்ந்தெடுக்க முடிவு செய்த நிலையில், சிறந்த 10 வீரர்களை அழைத்து அவர்களிடம் விதைகளை கொடுக்கிறார். அடுத்த 3 மாதத்திற்குள் யார் இதை சிறப்பாக வளர்க்கிறார்களோ அவரே தளபதி என அறிவிக்க, ஒருத்தர் ஆளுயரத்துக்கும், ஒருத்தர் தோளுயரத்துக்கும் வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.

ஒருவர் மட்டுமே வளர்க்காமல், ராசா எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தேன். ஆனால், இந்த விதை வளரவே இல்லை என்றார். அப்போ நீதான் என்னோட அடுத்த தளபதி என அரசர் சொல்லிவிட்டு, நான் அனைவரிடமும் கொடுத்தது வெந்த விதைகள். அது ஒரு நாளும் செடியாக மாறாது. இவர்கள் 9 பேரும் திருட்டுப் பசங்க என்று சொல்லும் கதையை விஜய் மதுரை மாநாட்டில் கூறியிருந்தார்.

நான் சொன்ன கதை: முன்னதாக 2021ம் ஆண்டு தேர்தலின் போது சீமான் இதே போன்ற சாயல் கொண்ட கதையை பேசிய வீடியோக்களை சீமான் தொண்டர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்த நிலையில், அது என்னோட கதை அந்த கதையைத் தான் தம்பி விஜய் பேசியிருக்கிறார், நான் மன்னன் எனக் கூறியதை தளபதி என மாற்றிவிட்டார் விஜய் என சீமான் கூறியுள்ளார்.

Bluesattai Maran roasts Seeman and supports TVK Vijay in Kutty story matter

ப்ளூ சட்டை மாறன் கலாய்: "அந்தக்கதை பல வருடங்களுக்கு முன்பே அம்புலிமாமா, சிறுவர் மலர்களில் வந்துவிட்டது. இணையத்திலும் உள்ளது. அதைத்தான் உங்கள் கதையாக சொல்கிறீர்கள்." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சீமானை கலாய்த்துள்ளார். சீமான் அந்த கதையை சொல்லும் போது அது வைரலாகவில்லை என்றும் விஜய் சொன்னதும் அந்த கதை இந்தியளவில் வைரலாகி விட்டது என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சீமான் மற்றும் விஜய் இருவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X