ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ்.. ஆன்டி இண்டியன் படம் பற்றி சொன்ன ப்ளூசட்டை மாறன்.. என்ன தெரியுமா?

சென்னை: ஆன்டி இண்டியன் திரைப்படம் தொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக இயக்குநரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் திரைப்படங்களை விமர்சித்து வருபவர் இளமாறன்.

அவர் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் படத்திற்கு தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

மத்திய அரசை விமர்சித்து

மத்திய அரசை விமர்சித்து

ஆன்டி இண்டியன் படத்தில் மத்திய அரசை விமர்சித்து ஏகப்பட்ட காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. யூடியூபில் விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ள நிலையில், முதல் படமே ரிலீஸ் ஆக முடியாமல் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது.

படத்திற்கு தடை

படத்திற்கு தடை

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் படத்தை பார்த்த தணிக்கைக் குழு படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதால் அந்த படத்திற்கு 'கட்' ஏதும் கொடுக்கமால் தடை விதித்தது.

அங்கேயும் தோல்வி

அங்கேயும் தோல்வி

தணிக்கைக் குழு ஆன்டி இண்டியன் படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாது என தடை விதித்த நிலையில் படத்தின் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் இது தொடர்பாக மேல்முறையீடு செய்திருந்தார். படத்தை பார்த்த ரிவிஷன் கமீட்டியும் படத்தை முழுதாக வெளியிட முடியாது என்றும் ஏகப்பட்ட கத்திரிகளையும் போட வேண்டும் என்றும் கூறியுள்ளதாக ப்ளூசட்டை மாறன் தற்போது வெளியிட்டுள்ள ஜகமே தந்திரம் விமர்சன வீடியோவில் கூறியுள்ளார்.

பேட் நியூஸ்

பேட் நியூஸ்

மேல்முறையீட்டில் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்த ஆன்டி இண்டியன் படக்குழுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அந்த பேட் நியூஸை கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், இனி முழு படத்தையும் ரசிகர்கள் பார்வைக்கு கொண்டு வர சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். இதுவே நல்ல புரமோஷன் தான்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

மேலும், ப்ளூ சட்டை மாறன் சொன்ன குட் நியூஸ் என்னவென்றால், அவர் இயக்கி உள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் பிரான்ஸில் நடைபெறவுள்ள கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ள சந்தோஷமான செய்தியையும் கூறியுள்ளார். மேலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் மாறன் இறங்கி உள்ளார்.

ஒடிடிக்கு வாய்ப்பில்லை

ஒடிடிக்கு வாய்ப்பில்லை

சென்சார் பிரச்சனை இருந்தால் தாராளமாக ஒடிடியில் ரிலீஸ் பண்ணுங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், சட்டப் போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறேன் என அழுத்தம் திருத்தமாக ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதால், நிச்சயம் ஆன்டி இண்டியன் ஒடிடிக்கு வராது என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X