twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 கோடி ரூபாய் இழப்பீடா.. கங்கனா மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஹைகோர்ட்டில் மும்பை மாநகராட்சி பதில்!

    |

    மும்பை: 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மும்பை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்கனா ரனாவத், சுஷாந்த் மரணத்திற்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் இருப்பதாகவும், போதை பொருள் புழக்கம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

    அதோடு மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போன்று இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு சிவ சேனா கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

     உன்னாலே உன்னாலே நாயகன்.. வினய்க்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து! உன்னாலே உன்னாலே நாயகன்.. வினய்க்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

    கங்கனா அலுவலகம் இடிப்பு

    கங்கனா அலுவலகம் இடிப்பு

    கங்கனாவின் கருத்துக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 9 ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகதியில் உள்ள கங்கனா அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று கூறி மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.

    இடிப்பு பணிகளுக்கு தடை

    இடிப்பு பணிகளுக்கு தடை

    மும்பை மாநகராட்சியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மும்பை மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில், கங்கனாவின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு இடிப்பு பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

    ரூ. 2 கோடி இழப்பீடு

    ரூ. 2 கோடி இழப்பீடு

    இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி கங்கனா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மும்பை மாநகராட்சி தனக்கு ரூ.2 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும், தனது அலுவலகத்தில் 40 சதவீதம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், சோபாக்கள், பழங்கால ஓவியங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    துஷ்பிரயோகம்

    துஷ்பிரயோகம்

    இதுதொடர்பாக மும்பை மாநகராட்சி நேற்று உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் ‘சட்டப்பூர்வமாக' செய்யப்பட்ட ஒரு காரியத்திற்கு இழப்பீடு கோரி நடிகை கங்கனா சட்டத்தின் செயல்பாட்டை துஷ்பிரயோகம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

    தள்ளுபடி செய்யவேண்டும்

    தள்ளுபடி செய்யவேண்டும்

    சேதத்திற்கு இழப்பீடு கேட்கும் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சியின் குடி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சட்டப்படி நிற்காத ஒரு மனுவைத் தாக்கல் செய்ததற்கு நீதிமன்றம் கங்கனாவுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்றும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

    "ரிட் மனு மற்றும் அதில் கோரப்பட்ட நிவாரணம் அதிகார துஷ்பிரயோகம் ஆகும். அவரது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் செலவுகளுடன் தள்ளுபடி செய்ய வேண்டும், "என்று பிஎம்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மும்பை நீதிமன்றம் வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

    English summary
    BMC asks high court to dismiss Kangana Ranaut's Rs 2 crore demand Plea. On 9th BMC demolished Kangana's office in Mumbai that she had made substantial structural alterations without due permission.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X