முன்னிலையில் விஜய் ஆண்டனி.. திணறும் இளையராஜா இசை அமைத்த படம்.. வசூல் விபரம் இதோ!
சென்னை: இந்த வாரம் பெரிய கதாநாயகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத காரணத்தால் காலியாக இருக்கும் தியேட்டர்களையும், ஆடி 18 என்ற விழா காலத்தையும் பயன்படுத்தி தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் 6 படங்கள் ரிலீஸ் ஆனாது.
அதாவது, போட், மழை பிடிக்காத மனிதன், வாஸ்கடகோகாமா, பேச்சி, நண்பன் ஒருவன் வந்த பிறகு மற்றும் ஜமா என ஆறு படங்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த ஆறு படங்களின் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

போட்: சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடக்கும் கதைதான் போட். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த அரசியல் நையாண்டி படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 50 லட்சங்கள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது முதல் நாளில் ரூபாய் 18 லட்சமும், இரண்டாவது நாளில் 32 லட்சமும் வசூல் செய்துள்ளது. வார இறுதி நாளான இன்று இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை பிடிக்காத மனிதன்: விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அதிரடி ஆக்ஷன் படம்தான் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் முதல் ஒரு நிமிடக் காட்சி இயக்குநர் விஜய் மில்டனுக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டிருந்தார். படம் முதல் நாளில் ரூபாய் 45 லட்சங்களும் இரண்டாவது நாளில் ரூபாய் 58 லட்சங்களும் வசூல் செய்தது என கூறப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களில் படம் ரூபாய் 1.03 கோடி வசூல் செய்துள்ளது.

பேச்சி: சுற்றுலா செல்லும் நண்பர்கள் குழு அடர் வனப்பகுதிக்குள் சென்று பேச்சி என்ற பேயிடம் மாட்டிக் கொள்கின்றார்கள். இறுதியில் இவர்களில் எத்தனைப் பேர் வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை. முழுக்க முழுக்க வனப்பகுதிக்குள் நடப்பதால் படத்தின் ஒளிப்பதிவு மூலம் காட்டையே நமக்கு சுற்றிக்காட்டுகின்றது பேச்சி படக்குழு. படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 20 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாளான இன்று படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகின்றது.

வாஸ்கடகோகாமா: நகுல் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படம் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் ரூபாய் 6 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. வார விடுமுறை தினமான இன்று படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.

ஜமா: கூத்துக் கலைஞர்களை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் முதல் இரண்டு நாட்களில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என இரண்டு நாட்களுக்கு இரண்டு லட்சம் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு: இந்த படம் நண்பர்களை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த படம் மிகவும் பிடித்த படமாக அமையும் என படக்குழு நம்புகின்றது. நகைச்சுவை, எமோஷன் என நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் அனைத்து விதமான உணர்வுகளும் இந்த படத்தில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. படம் முதல் நாளில் ரூபாய் 6 லட்சமும், இரண்டாவது நாளில் 9 லட்சமும் என மொத்தம் 15 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











