கும்பமேளா கண்ணழகி மோனாலிசா.. வைர நெக்லஸை பரிசாக கொடுத்த பாலியல் சர்ச்சை பாபி செம்மனூர்.. காரணம் என்ன?
கேரளா: இந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். கும்பமேளாவை ஆவணப்படுத்த சென்றவர்களும் இதில் ஏராளம். இப்படியான நிலையில், கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்றுக்கொண்டு இருந்தார் மோனலிசா. அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவ, இவர் ஒரே நாளில் செம பேமஸ் ஆனார். பாலிவுட் சினிமாவிலும் கமிட் ஆகியுள்ளார். இப்படியான நிலையில் இவர் கேரளாவில் நகைக்கடையை திறந்து வைக்க வந்தார். அவருக்கு நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசாக கொடுத்துள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கோழிக்கோட்டில் உள்ள செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் மோனாலிசா கலந்து கொள்வார் என ஏற்கனவே, பாபி செம்மனூர் தெரிவித்திருந்தார். அதேபோல் நேற்று அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற கடை திறப்பு விழாவில் மோனாலிசா கலந்து கொண்டார். மோனாலிசாவை நேரில் பார்க்க மக்கள் கூட்டம் அதிகம் திரண்டு இருந்தது.

மோனாலிசா: நகைக் கடையை திறந்து வைத்த பின்னர் அவர் பேசும்போது, அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா என மலையாளத்தில் பேசினார். என்மீது அன்பு வைத்துள்ள மக்களுக்கு நான் என்றும் ரசிகையாக இருப்பேன் எனவும் தெரிவித்தார். அவரது பேச்சும் மலையாளத்தில் இவர் நலம் விசாரிப்பதை கேட்ட மக்கள் ஆரவாரம் செய்தனர்.
பாபி செம்மனூர்: இதைத் தொடர்ந்து பேசிய பாபி செம்மனூர், கும்பமேளாவில் ஃபேமஸான மோனாலிசா கடை திறப்பு விழாவிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மோனாலிசா இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மலையாளம் கற்றுக் கொண்டு உள்ளார். விரைவில் மலையாளம் நன்றாக பேசுவார். கும்பமேளாவின் வைரமான மோனாலிசா, கடை திறப்பு விழாவிற்கு வந்தது சந்தோஷமாக உள்ளது. நாங்கள் இணைந்து மீண்டும் கும்பமேளாவிற்கு செல்ல உள்ளோம் என பேசினார்.
வைர நெக்லஸ்: அதன் பின்னர் செய்தியாளர்களை மோனாலிசாவும் பாபி செம்மனூர் சந்தித்தனர். அப்போது மோனாலிசாவுக்கு பாபி செம்மனூர் வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசாக கொடுத்தார். மோனாலிசாவை கேரளாவிற்கு அழைத்துவர பாபி செம்மனூர், ரூபாய் 15 லட்சத்திற்கு மேல் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்விற்காக வரும்போதுதான் மோனாலிசா முதல் முறையாக கேரளா வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாபி செம்மனூர் மீது ஏற்கனவே நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார் ஒன்றை கேரள மாநிலம் கொச்சியில் புகார் அளித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











