இயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது
Recommended Video

டெல்லி: முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை பாபி டார்லிங்கின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை பாபி டார்லிங் கடந்த 2015ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர் போபாலை சேர்ந்த ரோடு கான்டிராக்டர் ராம்னீக் சர்மாவை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்தார்.

புகார்
ராம்னீக் தனது பணத்தை பறித்துக் கொண்டு இயற்கைக்கு புறம்பாக உறவு வைத்து தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக பாபி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசில் புகார் அளித்தார்.

அடி உதை
வரதட்சணை கேட்டு ராம்னீக் தன்னை வீட்டில் பூட்டி வைத்து அடித்து உதைத்ததாக பாபி போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் பாபி பப்ளிசிட்டி தேட இவ்வாறு போலி புகார் அளித்துள்ளதாக ராம்னீக் கூறினார்.

கைது
பாபி புகார் கொடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த 11ம் தேதி ராம்னீக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாபி
ராம்னீக் சிறையில் கம்பி எண்ணுகிறார். டெல்லி போலீசார் அவரை கடந்த 11ம் தேதி ரைது செய்தார்கள். தற்போது தான் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது என்று பாபி தெரிவித்துள்ளார்.

விவாகரத்து
ராம்னீக்கிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார் பாபி டார்லிங். மேலும் தன் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











