டாப் மாடல் கார்களை வாங்கிய விஜய் பட நடிகர்.. தனுஷூக்கு டஃப் கொடுப்பாரு.. எத்தனை கோடி தெரியுமா?..
மும்பை: அணிமல் படத்திற்கு பிறகு ரீ திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்து வில்லனாக மிரட்டி வரும் நடிகர் பாபி தியோல் தற்போது யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ் தந்துள்ளார். கங்குவா படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் பாபி தியோல் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது கனவு நிறைவேறிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்களும் ஆரவாரம் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய் அரசியலுக்கு அடியெடுத்து வைத்துவிட்ட நிலையில் அவரது கடைசி படம் ஜனநாயகன் என விஜய் அறிவித்து விட்டார். ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தமிழ் சினிமாவில் கங்குவா படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த பாபி தியோலுக்கு இப்படம் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. கங்குவா வரவேற்பை பெற தவறிய நிலையில் தற்போது ஜனநாயகன்படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் விஜய் குறித்து புகழ்ந்தும் பேசியிருந்தார்.

ஸ்வீட் ஹார்ட் விஜய்: ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறேன். அவர் உண்மையிலேயே ஸ்வீட் ஹார்ட். எப்போதுமே அன்பாகவும் பணிவாகவும் பழகி வருகிறார். குறிப்பாக அவரது எளிமையும் ரசிகர்களை அவர் அரவணைத்து செல்லும் பண்பை பார்த்து நான் ரொம்பவே ஆச்சரியப்பட்டேன் என்று தெரிவித்தார். இந்த செய்தி வெளியான நிலையில், பாபி தியோலை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். இதை சொல்வதுக்கு ஒரு மனசு வேண்டும் சார் என்றும் புகழ்ந்து பேச தொடங்கினர்.
புதிய கார்: சினிமா பிரபலங்கள் பலரும் நடிப்பையும் தாண்டி தங்களது கனவை நோக்கி பயணிப்பார்கள். குறிப்பாக நாய் வளர்ப்பது, பூனை வளர்ப்பது, ஆடம்பர சொகுசு பங்களா வாங்குவது என்பது வழக்கமான ஒன்று தான். அதையும் தாண்டி சில நடிகர்களின் வீட்டில் நேரம் காலம் தெரியாமல் கார்களாக வாங்கி குவிப்பார்கள். அதே போன்று பாபி தியோல் புதிய பிரம்மாண்டமான கார் ஒன்றை தனது வீட்டில் இறக்குமதி செய்திருக்கிறார். அதோட விலையை கேட்டால் தலையே சுத்திடும். புதிய காருடன் இருக்கும் புகைப்படத்தையும் பாபி தியோல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை பாபி தியோல் வாங்கியுள்ளார். இது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எஸ்வி எடிசன் 2 (SV Edition 2) என்கிற விலையுயர்ந்த வேரியண்ட்டை ஆகும். எஸ்வி எடிசன் 2 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.2.95 கோடி என கூறப்படுகிறது.

கார் பிரியர்கள்: பிரபலங்கள் சினிமாவிற்குள் வந்ததும் விதவிதமான கார்களை வாங்கி குவிப்பது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், சமீபத்தில் ஊர்வசி ராவ்துலா என்ற நடிகை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற சொகுசு காரை வாங்கினார். இதுவரை எந்த நடிகையிடமும் இல்லாத கார் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று தமிழ் சினிமாவில், தனுஷ், விஜய் போன்ற நடிகர்களும் கார் பிரியர்களாக இருக்கின்றனர். இந்தியாவிற்குள் இறக்குமதி ஆவதற்கு முன்பே இவர்களது வீட்டில் இருந்து விடும். அந்த அளவிற்கு இருவரும் கார் பிரியர்களாக இருக்கின்றனர். அண்மையில் நடிகர் தனுஷ் சுமார் 3.74 கோடியில் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் என்ற காரை வாங்கியிருந்தார்.


Click it and Unblock the Notifications











