சூர்யாவின் உயரம் குறித்து பேசிய பாபி தியோல்.. திடீரென கையை பிடித்து நிறுத்திய கங்குவா நடிகர்!
சென்னை: நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது அவரது கையை சூர்யா பிடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன. நடிகர் சூர்யாவை தொடர்ந்து அவரது ஹேட்டர்கள் அவரது உயரத்தை வைத்து கிண்டல் செய்து வரும் நிலையில், அதுதொடர்பாக பாபி தியோல் பேசியுள்ளார்.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான சிவா ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பாடி ஷேமிங்: நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ட்ரோல்கள் அவரது ஹேட்டர்களால் பரப்பப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கங்குவா படத்தை புரமோட் செய்ய சென்ற நடிகர் சூர்யா பேசும்போது பாபி தியோல் உடன் நடிக்கும் போது தனது ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஒன்று சேர்த்து அவருடன் நடித்தேன் எனக் கூறினார்.

பாபி தியோல் பாடி பில்டிங்: அனிமல் படத்தில் ரன்வீர் கபூருக்கு வில்லனாக நடித்த பாபி தியோல் சட்டையை கழட்டி வந்து கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போட்டதை பார்த்த ரசிகர்கள் அவரது பாடி பில்டிங்கை பார்த்து மிரண்டு விட்டனர். இந்நிலையில், நடிகர் சூர்யா பாபி தியோலின் பாடி பில்டிங் குறித்தும் அவருக்கு சரிக்கு சமமாக சண்டை போட 49 வயதிலும் சிக்ஸ்பேக் வைத்து நடித்தது குறித்தும் பேசினார்.
சூர்யாவின் உயரம் பற்றி: அப்போது குறுக்கே வந்த பாபி தியோல் நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து பேசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நடிகர் சூர்யாவின் உயரம் இங்கே முக்கியமில்லை. அவர் எவ்வளவு உயரமான இடத்தில் உள்ளார் என்பது தான் முக்கியம். மனதளவிலும் உயர்ந்த மனிதர் சூர்யா என பாபி தியோல் புகழ்ந்து பேச, சூர்யா எமோஷனலாகி பாபி தியோல் கைகளை பிடித்து போதும் என சொல்வது போல தடுத்தார்.


Click it and Unblock the Notifications











