அல்லு அர்ஜுனின் 'புஷ்பா'வில் இருந்து விலகிய விஜய் சேதுபதி... இப்ப இந்த வில்லன் நடிக்கிறாராமே!

By

சென்னை: விஜய் சேதுபதி விலகிய தெலுங்கு படத்தில் இந்த தமிழ் நடிகர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

Recommended Video

Pushpa First Look | Stylish Star Allu Arjun 37th Birthday

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படம், புஷ்பா.

இதை சுகுமார் இயக்குகிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

பர்ஸ்ட் லுக் சாதனை

பர்ஸ்ட் லுக் சாதனை

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தாடி மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில், இருக்கிறார், அல்லு அர்ஜூன். இந்த போஸ்டர், வெளியான அன்றே பரபரப்பானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகமான லைக்ஸ்களை பெற்று, ட்விட்டரில் சாதனை படைத்தது. இது செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது என்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம்

தமிழ், தெலுங்கு, கன்னடம்

பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் சேதுபதி விலகி விட்டதாகவும் அவருக்குப் பதிலாக வேறு நடிகரை தேடி வருவதாகவும் கூறப்பட்டது.

தனஞ்செயா

தனஞ்செயா

இதற்கிடையே கன்னட ஹீரோ தனஞ்செயா, இந்தப் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாயின. இவர் ஏற்கனவே பைரவ கீதா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்தப் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையே புஷ்பா படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா

அதாவது விஜய் சேதுபதி விலகிய கேரக்டரில் பாபி சிம்ஹாவை நடிக்க வைக்க பேசி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழில் பல படங்களில் நடித்துள்ள பாபி சிம்ஹா, தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில், ரவிதேஜாவின் டிஸ்கோ ராஜா படத்தில் நடித்திருந்தார். இப்போது புஷ்பாவில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி விலகியதற்காக காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X