இதோ அடுத்த அதிரடி.. மாஸ் படத்திற்கு ரெடியான பாபி சிம்ஹா!

சென்னை : பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில், பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார்.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாபி சிம்ஹா. இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் ஜிகிர்தண்டா படம் தான். தேசிய விருதும் வாங்கி கொடுத்த திரைப்படம்.

ஜிகிர்தண்டா

ஜிகிர்தண்டா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இவர் தேசிய மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டுகிறார்.

மகான்

மகான்

பாபி சிம்ஹா விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தில் சத்யவான் ரோலில் சாராய வியாபாரியாக நடித்து மிரட்டி இருந்தார். இந்த படத்தில் பாபி சிம்ஹாவின் கேரக்டரை அனைவரும் பாராட்டும் வகையில் இருந்தது. கார்த்திக் சுப்புராஜின் படங்களில் மட்டும் பாபி சிம்ஹாவுக்கு நடிப்பு எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியவில்லை.

பாபி சிம்ஹா புதிய படம்

பாபி சிம்ஹா புதிய படம்

இந்நிலையில், பாபி சிம்ஹா தடை உடை திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 5ந் தேதி தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X