வெயிட்டாக உருவாகும் சியான் 60.. சிம்ரனை தொடர்ந்து விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

சென்னை: சிம்ரனை தொடர்ந்து சியான் 60 படத்தில் இன்னொரு பிரபல நடிகரும் இணைந்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் நடிகர் விக்ரம் முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

தனுஷ் படத்தை தொடர்ந்து

தனுஷ் படத்தை தொடர்ந்து

பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை இயக்கினார். நெட்பிளிக்ஸிற்கு விற்கப்பட்ட ஜகமே தந்திரம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக சியான் 60 படத்தை ஆரம்பித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

மகனுடன் இணைந்து

மகனுடன் இணைந்து

பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விக்ரம் அடுத்ததாக சியான் 60 படத்தில் தனது மகன் துருவ் விக்ரம் உடன் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளார். பக்கா கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

துருவுக்கு ஜோடியா

துருவுக்கு ஜோடியா

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வைபவ் உடன் லாக்கப் படத்தில் நடித்த வாணி போஜன் இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ரம்யா பாண்டியன் உடனும் சூர்யா தயாரிப்பில் வாணி போஜன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் ஆன் போர்டு

சிம்ரன் ஆன் போர்டு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்த நடிகை சிம்ரன் சியான் 60 படத்திலும் இணைந்துள்ளார். நடிகர் பிரசாந்தின் அந்தகன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சிம்ரன். அடுத்தடுத்து கோலிவுட்டில் நடித்து மிகப்பெரிய கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார் சிம்ரன்.

இன்னொரு பிரபலம்

இன்னொரு பிரபலம்

இந்நிலையில், தற்போது இன்னொரு பிரபல நடிகரும் சியான் 60 படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் குறும்படங்களில் ஆரம்பித்து முதல் படமான பீட்சா என ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா தான் தற்போது சியான் 60 படத்தில் இணைந்துள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவாக நடித்து அசத்திய நடிகர் பாபி சிம்ஹா தேசிய விருதை தட்டித் தூக்கினார். அது போல சியான் 60 படத்திலும் மிரட்டலான வில்லனாக நடிக்க உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பாபி சிம்ஹாவுடனான நட்பை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைத்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X