கோடிக்கணக்கில் கொடுத்தேன்.. என்னை ஏமாத்திட்டாங்க.. கொடைக்கானல் பங்களா சர்ச்சை.. பாபி சிம்ஹா பரபர!

சென்னை: ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய பாபி சிம்ஹா சிறந்த நடிகருக்கான தேசிய விருதையே தட்டிச் சென்றார். தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா சமீப காலமாக ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்து வரும் நிலையில், திடீரென கொடைக்கானலில் அவர் கட்டிய வீடு விதிகளை மீறி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

தனது நண்பரின் உறவினர் மூலம் வீடு கட்டும் கான்ட்ராக்ட்டை கொடுத்த பாபி சிம்ஹாவிடம் 90 சதவீதம் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை சரியாக கட்டவில்லை என்றும் சரி செய்து கொடுக்க சொன்னால் அரசியல்வாதியை வைத்து மிரட்டுவதாகவும் பாபி சிம்ஹாவும் பேத்துப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Bobby Simha opens up about all the allegations and what happened in his Kodaikanal house controversy

தனது தாய் தந்தைக்கு வீடு கட்டிக் கொடுக்க நினைத்தேன். ஆனால், இப்படி என்னை கான்ட்ராக்டர்கள் ஏமாற்றுவார்கள் என நினைக்கவில்லை என புலம்பியுள்ளார்.

நடிகர் பாபி சிம்ஹா: சேரனின் மாயக்கண்ணாடி படத்தில் ஒரு சாதாரண ரோலில் நடித்த பாபி சிம்ஹா காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா என படிப்படியாக துணை நடிகரில் இருந்து தேசிய விருது நடிகராக தன்னை உயர்த்திக் கொண்டார்.

ஹீரோவாக சில படங்களில் பாபி சிம்ஹா நடித்தாலும், அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த ஆண்டு வெளியான வல்லவனுக்கும் வல்லவன், வசந்த முல்லை படங்கள் சொதப்பின. இந்நிலையில், கொடைக்கானலில் வீடு கட்டி வந்த பாபி சிம்ஹா பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ள நிலையில், அதுதொடர்பான விளக்கத்தை யூடியூப் சேனலுக்கு போன் கால் மூலம் அளித்த பேட்டியில் விரிவாக கூறியுள்ளார்.

கொடைக்கானலில் பங்களா: நடிகர் பாபி சிம்ஹா சுமார் 30 ஆண்டுகளாக தனது பெற்றோர்களுடன் கொடைக்கானலில் பேத்துப்பாறை எனும் இடத்தில் ஒரு சின்ன வீட்டில் வசித்த வந்த நிலையில், தனது அப்பா அம்மாவுக்கு பெரிதாக ஒரு வீடு கட்ட நினைத்து தனது நண்பர் ஜமீர் காசிம் மூலமாக அவரது உறவினர் முகமது உசைனிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

90 சதவீதம் பணம் கொடுத்தேன்: பாபி சிம்ஹா பாதி பணத்துக்கு மேல் கொடுக்கவில்லை என்றும் கொடைக்கானலில் தடையை மீறி ஜேசிபி, வெடி பொருட்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்து வீடு கட்டியதாக அவரது நண்பர் ஜமிர் காசிமே புகார் அளித்துள்ள நிலையில், நான் ஒரு கோடியே 20 லட்சம் பணத்தை கொடுத்து விட்டேன். ஒட்டுமொத்தமாக அக்ரீமென்ட் போட்டது ஒரு கோடியே 30 லட்சத்துக்குத்தான் தான் என்றும் 60 லட்சம் வரை அக்கவுண்டில் டிரான்ஸ்ஃபர் செய்திருக்கிறேன். மீதி பணத்தை அவ்வப்போது கேஷாக வாங்கி உள்ளனர். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

விதிகளை நான் மீறவில்லை: வீடு கட்ட சொன்ன நிலையில், பால் காய்ச்சும் போது தான் அந்த வீட்டுக்கே போய் பார்த்தேன். போனால், எல்லாமே கையோடு பிடுங்கிக் கொண்டு வந்தது. ஏன் இப்படி கட்டியிருக்கீங்க என போன் போட்டு கேட்ட நிலையில், உசைன் நாளை வருவதாக கூறிவிட்டு தலைமறைவாகி விட்டார். அதன் பின்னர் தான் போலீஸில் புகார் அளித்தேன்.

வீடு கட்ட கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்த நிலையில், வெடிபொருட்களை வைத்து பாறையை நான் உடைத்தேன் என என்மீது எப்படி குற்றம்சாட்ட முடியும் என பாபி சிம்ஹா கேள்வி எழுப்பி உள்ளார்.

கொலை மிரட்டல்: விவகாரம் பெரிதாக சென்ற நிலையில், அரசியல்வாதிகளை எல்லாம் வைத்து கொடைக்கானலில் நீங்க நிம்மதியா வாழவே முடியாது என கொலை மிரட்டல் விடுத்தனர். அனைத்தையும் போலீஸிலும் நீதிமன்றத்திலும் சமர்பித்துள்ளோம். என் மீது எந்தவொரு தவறும் இல்லை. ஆனால், நான் தான் விதி மீறி விட்டேன் என என்மீது அபாண்டமான பழியை தற்போது எதிர் தரப்பினர் பரப்பி வருகின்றனர் என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X