twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாபி சிம்ஹாவின் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’

    By Mayura Akilan
    |

    சென்னை: சென்னை மாநகரத்திற்குள் நுழைந்த உடன் வெளியூர்வாசிகளை சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற போர்டுதான் வரவேற்கும். அதையே இப்போது படத்தின் தலைப்பாக வைத்துவிட்டனர்.

    ஜிகர்தண்டா' படத்திற்குப் பிறகு பாபி சிம்ஹாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஜிகர்தண்டாவில் வில்லன் அசால்ட் சேதுவாக நடித்த சிம்ஹாவின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டதால் புதிய வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

    பாபி சிம்ஹா

    பாபி சிம்ஹா

    ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘இறவி', மனோபாலா தயாரிப்பில் ‘பாம்பு சட்டை' மற்றும் ‘உறுமீன்' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

    புதிய படத்தில்

    புதிய படத்தில்

    பாபி சிம்ஹா தற்போது ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்னும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    பெண்ணைத் தேடி

    பெண்ணைத் தேடி

    கல்யாணத்திற்காக பெண் தேடி அலையும் மூன்று இளைஞர்கள், அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகளால் அவர்கள் எடுக்கும் முடிவுகள்தான் படத்தின் கதையாம்.

    புதுமுகங்கள்

    புதுமுகங்கள்

    இதில் கதாநாயகியாக சரண்யா நடிக்கிறார். மேலும் பாபி சிம்ஹாவுடன், லிங்கா மற்றும் பிரபஞ்செயன் என்னும் புதுமுக நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

    நண்பருக்கு நண்பர்

    நண்பருக்கு நண்பர்

    இப்படத்தை மருதுபாண்டியன் இயக்குகிறார். இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jigarthanda fame actor Bobby Simha’s next Movie Chennai Ungalai Anbudan Varaverkirathu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X