பாபி சிம்ஹாவின் "வசந்த முல்லை" பட டீஸர் தேதி வெளியானது.. குஷியில் ரசிகர்கள்!

சென்னை : ஹீரோ,வில்லன், குணசித்திர கதாபாத்திரங்கள் என அனைத்திலும் பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

பாம்பு சட்டை,திருட்டுப்பயலே 2, உறுமீன், கோ 2 ஆகிய படங்களை தொடர்ந்து ஹீரோவாக நடித்துள்ள வசந்த முல்லை படத்தின் டீஸர் தேதி வெளியாகி உள்ளது.

தேசிய விருது

தேசிய விருது

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியப்படைய செய்தவர் நடிகர் பாபி சிம்ஹா கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் மிரட்டும் நடிப்பில் வில்லனாக நடித்து தெறிக்கவிட்டவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

வசந்த முல்லை

வசந்த முல்லை

உறுமீன்,திருட்டுப்பயலே 2,பாம்பு சட்டை,கோ 2 உள்ளிட்ட படங்களில் பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்து உள்ள நிலையில் தற்போது இயக்குனர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையில் வசந்த முல்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதன் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Recommended Video

Blue Sattai Maran -க்கு YouTube வைத்த ஆப்பு | Jagame Thanthiram Tamil Talkies
டீஸர் தேதி

டீஸர் தேதி

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நடிகை காஷ்மீரா இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் வசந்தமுல்லை டீஸர் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

கன்னடத்தில் வசந்த கோகிலா

கன்னடத்தில் வசந்த கோகிலா

ஜூன் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வசந்த முல்லை டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வசந்தமுல்லை எனவும் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வசந்த கோகிலா எனவும் இது படம் வெளியாகிறது. பாபி சிம்ஹாவின் மனைவியும் நடிகையுமான ரேஷ்மிமேனன், ராஜானி தல்லூரியுடன் இணைந்து தயாரித்து உள்ளனர். ராஜேஷ் முருகன் இசையமைத்துள்ளார் . கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X