பாபி சிம்ஹாவின் "வசந்த முல்லை" டீசர் வெளியானது... மனுஷன் மிரட்டி இருக்காரே!
சென்னை : ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருதை வென்றவர் நடிகர் பாபி சிம்ஹா.
வில்லனாக மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இப்பொழுது திரில்லர் கதை களத்தில் உருவாகியிருக்கும் வசந்த முல்லை படத்தில் ஹீரோவாக நடித்திருக்க அதன் மிரட்டலான டீசர் வெளியாகி இணையதளத்தை கலக்கி கொண்டுள்ளது.

தேசிய விருது
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திர நாயகனாக உள்ள நடிகர் பாபி சிம்ஹா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த பாபி சிம்ஹா அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டாவில் மிரட்டும் வில்லனாக நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றார்.

திருட்டுப்பயலே 2
தொடர்ந்து வில்லனாக வலம் வந்தாலும் பல படங்களில் கதாநாயகனாகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார். அந்த வகையில் உறுமீன், கோ 2,பாம்பு சட்டை, திருட்டுப்பயலே 2 என இவரது நடிப்பில் வெளியான படங்கள் வெற்றியும் பெற்றுள்ளது. கடைசியாக புத்தம் புது காலை ஆந்தாலஜி திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடித்து இருந்தார்.

ரேஷ்மி மேனன் தயாரிப்பில்
இந்தியன் 2, 777 சார்லி மற்றும் குல்லி ரவுடி ஆகிய படங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் வசந்த முல்லை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மனைவியும் நடிகையுமான ரேஷ்மி மேனன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் இப்பொழுது வெளியாகி இணைய தளத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

டீசர் வெளியானது
முற்றிலும் சுயநினைவை இழந்து தண்ணீருக்குள் மூழ்கி விழுந்து கிடக்கும் பாபி சிம்ஹாவை கதாநாயகி காஷ்மீரா நீச்சலடித்துக் கொண்டே வந்து எழுப்ப முயற்சிக்க ஏழாமல் இருக்கிறார் பின் லிப் லாக் கொடுத்து மூச்சு கொடுத்த பின் நினைவு துரத்துகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் பறக்கும் கார் சேஸிங் பாபி சிம்ஹாவின் ஆக்ரோஷமான நடிப்பு என முற்றிலும் த்ரில்லராக இருக்கும் இப்படத்தின் டீசர் பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் தமிழில் வசந்த முல்லை எனவும் கன்னடம் மற்றும் தெலுங்கில் வசந்த கோகிலா எனவும் ரிலீஸ் ஆகிறது


Click it and Unblock the Notifications











