இந்தியன் 2 படத்தை அறிவாளிங்க பார்க்க வேண்டாம்.. பாபி சிம்ஹா என்ன பாஸ் இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: இந்தியன் 2 படம் போன வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் பெரிதாக எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், இந்த வாரமும் பாக்ஸ் ஆபிஸில் இந்தியன் 2 படம் தான் கல்லா கட்டும் என தெரிகிறது.

ஆனால், கடந்த ஒரு வாரமாக இந்தியன் 2 படத்தை சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் சில சின்னத்திரை பிரபலங்கள் என பலர் முடிந்த வரை ட்ரோல் செய்து வருகின்றனர். சின்ன படங்கள் இப்படி சொதப்பினாலோ, அறிமுக இயக்குநர்கள் இதுபோன்ற படங்களை கொடுத்தாலோ ரசிகர்கள் இந்த அளவுக்கு ரியாக்ட் செய்யமாட்டார்கள்.

Indian 2 Bobby Simha Shankar 2

ஆனால், சிறு வயது முதலே தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என கொண்டாடப்பட்டு வந்த ஷங்கர் இந்த முறை ராஜமெளலிக்கே டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் சரியாக அமையாத நிலையில், அப்செட்டான ரசிகர்களின் வெளிப்பாடு தான் இது என்கின்றனர்.

பாபி சிம்ஹா பேட்டி: ஜிகர்தண்டா படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா அதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும், பெரிதாக வெற்றியை பெறவில்லை என்கிற வருத்தம் தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். பல வருடங்கள் முன்பே இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா நடித்து விட்டார். கடைசியாக சில காட்சிகள் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டன. விவேக் மற்றும் நெடுமுடி வேணு மறைவுக்குப் பிறகு மற்றவர்களை வைத்து காட்சிகளை எடுத்து ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக அவர்களை உருவாக்கிய நிலையில், அந்த காட்சிகளிலும் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அறிவாளிகள் படம் பார்க்காதீங்க: இந்தியன் 2 படத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு டென்ஷனான பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தை பார்க்க அறிவாளிகள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆடியன்ஸ் வந்தாலே போதும் குடும்ப ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என பாபி சிம்ஹா கூறியுள்ளார். அவரது பேச்சு சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியன் 3 ஹிட் அடிக்கும்: மேலும், இந்தியன் 3 திரைப்படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு முழுப்படமும் புரியும் என்றும் இந்தியன் 3 மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் பாபி சிம்ஹா கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 3 படத்திற்கான ஷூட்டிங் இன்னும் சில நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X