நேனு சிம்ஹாரா... தெலுங்கு ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் பாபி சிம்ஹா

By

சென்னை: தெலுங்கு படத்தில் பவர்புல் வில்லனாக நடிக்கிறார் பாபி சிம்ஹா.

தமிழில், சூதுகவ்வும், ஜிகிர்தண்டா, நேரம், உறுமீன், திருட்டுப்பயலே 2, கருப்பன் உட்பட பல படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா.

இவர் இப்போது டிஸ்கோ ராஜா என்ற தெலுங்கு படத்தில் பவர்புல் வில்லனாக நடித்து வருகிறார்.

ரவிதேஜா ஹீரோ

ரவிதேஜா ஹீரோ

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார். பாயல் ராஜ்புத், தன்யா ஹோப், நபா நடேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அப்புச்சிக் கிராமம்

அப்புச்சிக் கிராமம்

இதை விஐ.ஆனந்த் இயக்குகிறார். இவர், தமிழில் அப்புச்சிக் கிராமம் என்ற படத்தை இயக்கியவர். படம் பற்றி அவர் கூறும்போது, தெலுங்கில் டைகர், எக்கடிக்கு போதாவு சின்னவாரு, ஒத்த ஷணம் ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

டிஸ்கோ ராஜா

டிஸ்கோ ராஜா

இப்போது, டிஸ்கோ ராஜா என்ற படத்தை இயக்குகிறேன். இதில் ரவிதேஜா ஹீரோ. பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன் பாபி சிம்ஹா சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் இதில் பவர்புல் வில்லனாக நடித்துள்ளார். ஹீரோவுக்கு கடுமையான சவால் கொடுக்கும் கேரக்டர்.

சயின்ஸ் பிக்சன்

சயின்ஸ் பிக்சன்

தமன் இசை அமைக்கிறார். இது சயின்ஸ் பிக்சன் கதையை கொண்ட ஆக்‌ஷன் படம். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை அடுத்து தமிழிலும் படம் இயக்க இருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X