நதிகளில் மிதக்கும் பிணங்கள் கங்கையில் அல்ல.. நைஜீரியாவில் எடுத்த புகைப்படங்கள் என கங்கனா உருட்டு!
மும்பை: கங்கை நதிக்கரையில் கொரோனா பிணங்கள் மிதக்கின்றன என சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், நடிகை கங்கனா அதை மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வந்த நடிகை கங்கனா ரனாவத்தின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது.
ட்விட்டர் போனால் என்ன இன்ஸ்டாகிராம் இருக்கே என தனது கருத்துக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வெளியிட்டு வருகிறார்.

கங்கையில் பிணங்கள்
புனித கங்கை நதிக்கரையில் கொரோனா பிணங்கள் மிதக்கின்றன என்றும், அவற்றை நாய்கள் கடிக்கின்றன என்றும் ஏகப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நாடு முழுவதும் பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் கண்டித்து அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.

கங்கனா மறுப்பு
உத்தர பிரதேசம் மற்றும் பீகாரை சுற்றியுள்ள நதிக்கரைகளில் பிணங்கள் மிதப்பதாக வெளியான தகவல்களை முற்றிலுமாக நடிகை கங்கனா ரனாவத் மறுத்து புதிய பரபரப்பை கிளப்பி உள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நைஜீரியா நதிகளில்
கங்கை நதிக்கரையில் பிணங்கள் மிதப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தனது வீடியோவில் அதனை மறுத்துள்ள நடிகை கங்கனா ரனாவத் அவை அனைத்தும் நைஜீரியா நதிகளில் மிதந்த பிணங்களின் புகைப்படங்கள் என புது உருட்டு ஒன்றை உருட்டி உள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக
சமீபத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடர்பாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத், பாலஸ்தீனத்தை குண்டுகளால் துளைத்து எடுக்கும் இஸ்ரேஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார்.

இன்ஸ்டாகிராமிலும் தூக்கப் போறாங்க
அதற்கு எதிராகவும், தற்போது கூறியுள்ள கருத்துக்கு எதிராகவும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

குவாரன்டைனில் கங்கனா
சமீபத்தில் நடிகை கங்கனாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். படுக்கையறையில் செல்போன் கேமரா மூலமே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் கங்கனா ரனாவத்.


Click it and Unblock the Notifications











