For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டூப்பாலயே முடியல.. அந்த ஒரு காட்சிக்காக உயிரை பணயம் வைத்த விக்ரம்.. கோப்ரா இயக்குநர் சொன்ன சீக்ரெட்

  |

  சென்னை: ரிஸ்க் எடுப்பது என்றால் நம்ம சியான் விக்ரமுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்று அனைவருக்கும் தெரியும்.

  Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

  ஆனால், எல்லாத்துக்கும் மேல, கோப்ரா படத்தின் ஒரு காட்சிக்காக தனது உயிரையே பணயம் வைத்து நடித்துள்ளார் விக்ரம் என்ற ரகசியத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளிப்படுத்தியுள்ளார்.

  லாக்டவுன் காரணமாக இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடிக்க முடியாமல் காத்திருக்கிறது கோப்ரா.

  கார்த்திக் டயல் செய்த எண் கள்ளக்காதலா? கவுதம் மேனன் என்ன சொல்றாரு பாருங்க! கார்த்திக் டயல் செய்த எண் கள்ளக்காதலா? கவுதம் மேனன் என்ன சொல்றாரு பாருங்க!

  சியானும் ரிஸ்க்கும்

  சியானும் ரிஸ்க்கும்

  மாஸ் காட்டி நடிக்கும் நடிகர்கள் மத்தியில், உயிரை கொடுத்து நடிக்கும் வெகு சில நடிகர்களில் சியான் விக்ரம் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக ரிஸ்க் எடுத்து நடிப்பது விக்ரம் தான். சேது, காசி, பிதாமகன், அந்நியன், சாமுராய், கந்தசாமி, ஐ என பல படங்களில் அதனை நிரூபித்து இருப்பார்.

  டிரான்ஸ்ஃபார்மர்

  டிரான்ஸ்ஃபார்மர்

  தனது உடம்பை ஒரே படத்துக்காக எப்படி வேண்டுமானாலும் உருமாற்றும் டிரான்ஸ்ஃபார்மர் தான் சியான் விக்ரம். அந்நியன் படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று வித்தியாசமான நடிப்பை காட்டிய விக்ரம், ஐ படத்திற்காக ஏரிக்கரை லிங்கேசன், மாடல் லீ மற்றும் பழி வாங்கும் கோர முக கூனனாக நடித்து அசத்தியிருப்பார்.

  பல கெட்டப்கள்

  பல கெட்டப்கள்

  கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் 7 வித்தியாசமான கெட்டப்களில் சியான் விக்ரம் இருக்கும் போஸ்டர் ரிலீசாகி ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீனிதி, இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் 20 கெட்டப்பில் விக்ரம் வரப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

  உயிரை பணயம் வைத்த விக்ரம்

  உயிரை பணயம் வைத்த விக்ரம்

  கைகளை கட்டிக் கொண்டு, வாயையும் பொத்திக் கொண்டு, நீருக்கடியில் ஒரு ஸ்டன்ட் சீன் எடுக்கப்பட்டது. முதலில் அந்த காட்சியை டூப் வைத்து எடுத்து விடலாம் என்று தான் நினைத்தோம். ஆனால், டூப் நடிகராலேயே அந்த காட்சியை தாக்கு பிடிக்க முடியவில்லை. காட்சியை மாற்றலாம் என்ற யோசனையை விக்ரமிடம் கூறினேன், அதெல்லாம் வேண்டாம் என்ற விக்ரம் தனது உயிரையே பணயம் வைத்து அந்த காட்சியை நடித்துக் கொடுத்தார்.

  நரம்பு பிரச்சனை

  நரம்பு பிரச்சனை

  விக்ரமின் கண்களுக்குள் தண்ணீர் சென்று அவருக்கு அந்த காட்சியால் நரம்பு பிரச்சனையே உருவானது. ஆனாலும், ஒரு நிமிடமும் தாமதிக்காமல், அந்த ஷாட்டை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த ஷாட்டுக்கு மனுஷன் ரெடியாகிட்டார் என இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இப்படியொரு அட்டகாசமான ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

  4 பெரிய படங்கள்

  4 பெரிய படங்கள்

  வேற லெவலில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் அளவுக்கு ஒரு ஸ்க்ரிப்ட்டை இயக்குநர்கள் உருவாக்கினார்கள் என்றால், அவர்களின் முதல் தேர்வாக விக்ரம் தான் இருப்பார். கோப்ரா, பொன்னியின் செல்வன், மஹாவீர் கர்ணா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட 4 மெகா பட்ஜெட் படங்களில் சியான் விக்ரம் நடித்து வருகிறார். லாக்டவுன் முடியட்டும் சியான் வேட்டை ஆரம்பமாகும்.

  English summary
  Even Body double can’t hold his breath in that particular underwater scene in Cobra. Then Vikram takes the challenge and risks his life to did the scene perfect Cobra director revealed this in a recent interactions.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X