»   »  தனியார் கல்வி முதலாளியின் தாராள நிதியில் தொடங்கியது ஜெயம்ரவியின் போகன்!

தனியார் கல்வி முதலாளியின் தாராள நிதியில் தொடங்கியது ஜெயம்ரவியின் போகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனியார் கல்வி முதலாளியின் தாராள நிதியுடன் தொடங்கப்பட்டிருக்கும் பிரபு தேவாவின் புதிய பட நிறுவனமான பிரபுதேவா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் போகன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Bogan movie launched with Pooja

ரோமியோ ஜூலியட் லஷ்மன் இயக்கத்தில் ஜெயம்ரவி, ஹன்சிகா மோத்வானி, அரவிந்தசாமி நடிக்கும் இந்தப் படத்தின் முதல் காட்சி இன்று பின்னி மில்லில் படமாக்கப்பட்டது.


Bogan movie launched with Pooja

இமான் இசையில் 'டமால் டுமீல்...' என்ற பாடல் காட்சி ராஜசுந்தரம் நடன அமைப்பில் ஜெயம் ரவி,வருண், நாகேந்திர பிரசாத் அக்ஷரா ஆகியோர் நடனமாட படமாக்கப்பட்டு வருகிறது.


Bogan movie launched with Pooja

இந்த படத் துவக்க விழாவில், இயக்குநர் லஷ்மன், வேல்ஸ் யுனிவர்சிட்டி ஐசரி கணேஷ் (இவர்தான் அந்த கல்வி முதலாளி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!), ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குநர் மிலன், விக்கி, அஸ்வின், ரோமியோ ஜூலியட் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

English summary
Jayam Ravi's Lakshman directed Bogan movie has launched with formal pooja today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil