“ரூ.100 பத்திரத்தில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார்..” கணவர் மீது பிரபல நடிகை பகீர் புகார்

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், திடீரென ஒருநாள் தன்னை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாகவும் போஜ்புரி நடிகை அலினா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Recommended Video

“ரூ.100 பத்திரத்தில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார்..” கணவர் மீது பிரபல நடிகை பகீர் புகார்

சென்னை: தனது கணவர் தன்னை முத்தலாக் விவாகரத்து செய்துவிட்டதாக போஜ்புரி நடிகை அலினா ஷேக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போஜ்புரி சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை அலினா ஷேக். முதஸ்ஸீர் பெய்க் என்பவரை கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், திடீரென ஒருநாள் தன்னை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாகவும் அலினா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிந்து போன கணவர்

பிரிந்து போன கணவர்

இதுகுறித்து அவர் கூறிகையில், " ஒருநாள் மாலை எனது கணவர் என்னையும், தனது குழந்தையையும் தனியா விட்டுவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர் நலமாக தான் இருக்கிறார் என்பதை பிறகு அறிந்துகொண்டேன்.

முத்தலாக் விவாகரத்து

முத்தலாக் விவாகரத்து

திடீரென ஒருநாள் ரூ.100 பத்திரத்தில் முத்தலாக் கூறி என்னை விவாகரத்து செய்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

கொடுமைப்படுத்தினர்

கொடுமைப்படுத்தினர்

கணவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்னை கொடுமைப்படுத்தினார்கள். நான் கர்ப்பிணியாக இருந்தபோதும், என்னை கொடுமைப்படுத்தினார்கள். அப்போது இருந்தே நான் கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன். நான் போலீசில் புகார் கொடுக்க முயன்றேன். ஆனால் எனது கணவர் தடுத்துவிட்டார்", என்றார்.

முத்தலாக் தடை சட்டம்

முத்தலாக் தடை சட்டம்

முத்தலாக் தடை சட்டம் நேற்று தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வரும் சூழலில், நடிகை ஒருவர் கணவர் தன்னை முத்தலாக் விவாகரத்து செய்துவிட்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X